சுனாமி நினைவு தினம்! படகில் சென்று நடுக்கடலில் பால் ஊற்றிய ஜெயக்குமார்! கரையில் குஷ்பு அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி சுனாமி ஆழிப் பேரலையில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியான நிலையில் இன்றைய தினம் 21 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வையொட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காசிமேடு கடற்கரையில் படகில் சென்று பால் ஊற்றி மரியாதை செலுத்தினார்.

அது போல் பட்டினம்பாக்கம் கடற்கரையில் பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு பால் ஊற்றில மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இதே நாளில் காலை கடற்கரைக்கு விளையாட சென்றவர்கள், வாக்கிங் சென்றவர்கள், அங்கு வசித்து வந்த மீனவ கிராமத்தினர் சற்றும் எதிர்பாராதவிதமாக சுனாமி எனும் ஆழிப்பேரலை ஏற்படும் என்பதை கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

Tsunami Remembrance Day

திடீரென தென்னை மரங்களின் உயரத்திற்கு உயர்ந்த அலைகளில் சிக்கியதாலும் ஊருக்குள் ஆளுயர வெள்ளம் புகுந்ததாலும் அப்படியே ஆயிரக்கணக்கானோரை வாரி சுருட்டிக் கொண்டுவிட்டது. இதில் பலர் தாய், தந்தையர், உறவினர்கள், சகோதர, சகோதரிகள், கணவன், மனைவி உள்ளிட்டோரை இழந்தனர்.

இந்த சம்பவம் நடந்த 21 ஆண்டுகள் ஆன நிலையிலும் ஆறாத ரணமாகியிருப்பதால் ஆண்டுதோறும் கடற்கரைக்கு சென்று தங்களின் உறவினர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தியும் கடலில் மலர்களை தூவியும் பலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அது போல் அரசியல் கட்சிகளும் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று பட்டினம்பாக்கம் கடற்கரையில் நடிகை குஷ்பு தனது கட்சியினருடன் வந்தார். அங்கு கடற்கரையில் பால் ஊற்றியும் மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், ஒவ்வொரு முறையும் என்னிடம் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்வியைத்தான் கேட்கிறீர்கள். நான் எந்த எதிர்பார்ப்பையும் வைத்திருக்கவில்லை. வரும் சட்டசபை தேர்தல் என்றில்லை, எந்த தேர்தலாக இருந்தாலும் கட்சி என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்பேன்.

வருங்கால இந்தியாவின் நலனுக்காக நான் ஒரு காரியகர்த்தாவாக பாடுபடுவேன். பியூஷ் கோயல் இப்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது முதல் சந்திப்புதான், மீண்டும் அவர் வரவிருக்கிறார். நானும் டெல்லி சென்று அவரை சந்திக்க இருக்கிறேன்.

எனவே பியூஷ் கோயலோ எடப்பாடி பழனிசாமியோ, தமிழக பாஜக தலைவரோ அறிவிக்காதவரை, பாஜகவுக்கு 23 தொகுதிகள் என்ற தகவல் வதந்தி என குஷ்பு தெரிவித்திருந்தார்.

அது போல் காசிமேடு கடற்கரைக்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், படகில் நடுக்கடலுக்குச் சென்று குடத்தில் உள்ள பாலை அப்படியே ஊற்றிக் கொண்டு சென்றார். மேலும் பூக்களை தூவியும் சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அது போல் தமிழகம் முழுவதும் கன்னியாகுமரி, நாகை, தஞ்சை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடற்கரைகளில் மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சுனாமியால் சிக்கி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+