நச்சரித்த தோழிகள்.. முகம் சுளிக்க செய்யும் கிண்டல்கள்.. மனம் நொறுங்கிய இளம்பெண்ணின் திடீர் முடிவு
தோழிகளின் கிண்டல் கேலியால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்
சென்னை: திருமணமானதில் இருந்தே சக தோழிகள் கேலி, கிண்டல் செய்து வந்ததால், 22 வயது கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளுர் மாவட்டம் ஆவடி சேக்காடு டிரைவர்ஸ் காலனியை சேர்ந்தவர் அகிலன்.. 27 வயதாகிறது.. . கிண்டியில் குடிநீர் வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலைசெய்து வருகிறார்.
இவருக்கும் வியாசர்பாடியை சேர்ந்த உறவினர் பெண்ணான ரோனிஷா என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

திருமணம்
இரு வீட்டார் சம்மதத்துடன்தான் இந்த திருமணம் நடந்தது. ரோனிஷாவுக்கு 22 வயதாகிறது.. அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் வருடம் படித்து வருகிறார்... திருமணத்திற்குப் பிறகு ஆவடியில் உள்ள தனது கணவர் வீட்டில் இருந்து காலேஜுக்கு சென்று வந்துள்ளார்... ரோனிஷாவின் மாமனார் குணசீலன் வணிகவரி அலுவலகத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றிருக்கிறார். மாமியார் எழிலகத்தில் தட்டச்சராக வேலை செய்து வருகிறார்..

தற்கொலை
இந்த நிலையில் நேற்று காலையில் மாமனார் குணசீலன் அரக்கோணம் சென்றிருந்த நிலையில், மாமியார் எழிலகத்திற்கு வேலைக்கு சென்றிருக்கிறார். கணவரும் வேலைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் தனியாக இருந்த ரோனிஷா, பெட்ரூம் ஃபேனில்தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்... நேற்று மதியம் ரோனிஷாவின் நாத்தனார் சிலம்பரசி வீட்டின் கீழ்தளத்துக்கு வந்து பார்வையிட்ட போது பேனில் ரோனிஷா தூக்கில் தொங்கியதை பார்த்து அலறி உள்ளார்..

இளம்பெண்
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர் தன்னுடைய குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.. ஆவடி போலீசார் தகவல் அறிந்து விரைந்து வந்தனர்.. இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆவடி போலீஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.

தோழிகள்
அப்போதுதான் சில தகவல்கள் வெளியாகின.. ரோனிஷாவிற்கு இந்த திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை.. இரு குடும்பத்தினரும் உறவினர்கள் என்பதால், இந்த கட்டாய கல்யாணத்திற்கு சம்மதித்துள்ளார்.. திருமணமான நாள் முதல் விரக்தியில் இருந்தது தெரியவந்துள்ளது... ஒருவழியாக மனதை தேற்றிக் கொண்டு காலேஜுக்கு சென்றிருக்கிறார். ஆனால், காலேஜில் நுழைந்ததுமே, தோழிகள் கேலி, கிண்டல் செய்து உள்ளனர்... ஓரிருநாளில் கிண்டல் இருக்கும் என்று நினைத்து பொறுமையாக இருந்துள்ளார்..

தற்கொலை
ஆனால், தினமும் அவர்களின் கிண்டல்கள் ரோனிஷாவுக்கு மனக்காயத்தை ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து தன்னுடைய அம்மா சசிரேகாவிடம் அடிக்கடி சொல்லி அழுது வந்துள்ளார்... அவரும் மகளுக்கு தைரியம் சொல்லி உள்ளார்.. இந்நிலையில் தான் மாமியார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ரோனிஷா தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்தது... திருமணமாகி 3 மாதங்களே ஆகிறதால், திருவள்ளூர் ஆர்டிஓவும் விசாரணை நடத்தி வருகின்றார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications