அரிய வகை இதய நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்! உயிர் காக்க உதவுங்கள்.. ப்ளீஸ்
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயதே ஆன இளம்பெண் அஜிதாவுக்கு இதயத்தில் தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவரது அறுவை சிகிச்சைக்கு ரூ. 5,00,000 வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. அஜிதாவின் சிகிச்சைக்கு உங்களால் முடிந்த சிறு உதவியை செய்யலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அஜிதா.. 22 வயதே ஆன அஜிதாவுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு இதயத்தில் தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அஜிதாவின் தந்தை சங்கர். இவர் அப்பகுதிகளில் சாதாரண கூலி வேலை செய்து வருகிறார். கூலி தொழிலாளியான அவரது வருமானத்தை மட்டுமே நம்பி தான் இளம்பெண் அஜிதாவின் குடும்பம் உள்ளது.
இந்த நிலையில் தான், அஜிதாவுக்கு மிகவும் சிக்கலான இதய பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதயத்தில் தமனிகள் வால்வு S/P PA Intact IAS/IVS என மிகவும் சிக்கலான பிரச்சினைகள் உள்ளன. இதற்காக அறுவை சிகிச்சை செய்வது மிகவும் அவசியம் ஆகும். மேலும் இந்த அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 5,00,000 வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏழைக் குடும்பத்தை சேர்ந்த அஜிதாவின் தந்தையால் இவ்வளவு தொகையை திரட்டுவது என்பது சாவாலானது ஆகும். அஜிதாவின் உடல் நல பாதிப்பு காரணமாக அவரது தாயாரும் வேலைக்கு செல்வது இல்லை. இதனால், அஜிதாவின் தந்தை சங்கர் தான் மொத்த நிதிச்சுமையையும் சமாளித்து வருகிறார். எனவே, ரூ.5 லட்ச ரூபாயை திரட்டுவது என்பது அஜிதாவின் குடும்பத்திற்கு இயலாத ஒன்றாகும்.
எனவே, அவரது குடும்பத்தினர், உதவும் மனப்பான்மை கொண்ட தனி நபர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்கிறார்கள். எனவே நீங்கள் அளிக்கும் சிறு உதவி கூட, அஜிதாவின் வாழ்க்கை போராட்டத்திற்கு ஒரு திருப்பு முனையே ஏற்படலாம். எவ்வளவு தொகை என்று முக்கியம் இல்லை. நீங்கள் அளிக்கும் சிறு தொகை கூட அஜிதாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு உதவும். எனவே தாமதிக்காமல் அஜிதாவின் உயிரை காப்பாற்ற உதவுங்கள். உங்களால் முடிந்த சிறு உதவியை கூட செய்யலாம்.














Click it and Unblock the Notifications