இதுதான் தமிழ்நாடு அரசு.. மெட்ராஸ் ஐஐடியில் காலடி வைத்த அரசு பள்ளி மாணவர்கள்.. வீடியோ பாருங்க
சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் காரணமாக அரசு பள்ளி மாணவர்கள் 225 பேர் என்ஐடி, ஐஐடி மெட்ராஸ் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர போகிறார்கள். அவர்களின் வீடியோ ஒன்று வெளியாகி காண்போரை நெகிழ வைத்துள்ளது.
அரசுப்பள்ளியில் திறமையான மாணவ-மாணவிகளை கண்டறிந்து அவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு வசதியாக 'அனைவருக்கும் ஐ.ஐ.டி.' என்ற திட்டத்தின் கீழ் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையால் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. '

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த பயிற்சியின் காரணமாக இந்த கல்வி ஆண்டில் (2023-24) சென்னை ஐ.ஐ.டி, திருச்சி தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் 225 பேர் சேர்ந்துள்ளனர்.
இவர்களுக்கான இளநிலை பட்டப்படிப்புக்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு முதன்மை கல்வி நிறுவனங்களில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 75 ஆக இருந்தது. இந்த ஆண்டு 225 ஆக உயர்ந்துள்ளது. இது தமிழகு அரசு பள்ளிகளின் மிகப்பெரிய சாதனை ஆகும்.

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களில் கடந்த ஆண்டு ஐ.ஐ.டி.க்கு போனவர் ஒரே ஒருவர் தான். ஆனால் இந்த ஆண்டு 6 பேர் செல்கிறார்கள். இவர்கள் குறித்த வீடியோ ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ காண்போரை நெகிழ வைத்துள்ளது.
என்ஐடி வாரங்கலில் போய் ஸ்ரீதேவி என்ற பெண் படிக்க போகிறார். இவருடைய வீடு அழகிய மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அரசு மாதிரி பள்ளியில் படித்தவர். ஊரிலேயே முதல்முறையாக இவ்வளவு பெரிய கல்லூரியில் படிக்கும் மாணவி இவர் தான் என்கிறார்கள்-
இதேபோல் சத்யபிரியா என்ற மாணவி திருச்சி என்ஐடி இல் சேர்ந்து படிக்க போகிறார். அவருடைய அப்பா, அம்மா யாருமே படிக்கவில்லை.. கூலித்தொழிலாளி தான்.. தான் நல்லா படிச்சு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதுதான் அந்த மாணவியின் கனவு ஆகும்.

இதேபோல் கீர்த்திகா என்ற பெண் திருச்சியில் உள்ள புகழ் பெற்ற தமிழக தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உள்ளார். மாற்றுத்திறனாளி மாணவியான கீர்த்திகா,தன்னை போன்ற மாற்றுத்திறனாளியின் உரிமை மறுக்கப்படுகிறது என்பதால், அதை கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறி படிக்க செல்கிறார்.
அரசு பள்ளியில் படித்த வசந்தகுமார் என்ற மாணவர் இன்று ஐஐடி மெட்ராஸில் சேருகிறார். இவரது தந்தை ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்யும் கூலி தொழிலாளி ஆவார். இவரை போல் மொத்தம் 225 மாணவ மாணவியர் அரசு பள்ளியில் படித்து இந்தியாவின் புகழ் பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். மிகவும் ஏழ்மை நிலையில் கல்வி தான் ஒரே ஆயுதம் என்பதை உணர்ந்துள்ள இந்த மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.
இவர்களும் அரசுப்பள்ளி மாணவர்கள்தான். இவர்களும் கிராமங்களை சேர்ந்தவர்கள்தான். ஆனால் எவ்வளவு எளிய பின்னணியில் இருந்து வந்து சாதித்து இருக்கிறார்கள். மன ஊக்கம் தருகிற காணொலி இது. ஒவ்வோரு சாதனை மாணவரும் அவர்களுடைய பின்னணிகளையும் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. pic.twitter.com/BJsbrjmBl2
— Athisha 😎 (@athisha) August 12, 2023
இந்த வீடியோவில் வரும் இவர்கள் அனைவரும் அரசுப்பள்ளி மாணவர்கள்தான். இவர்களும் கிராமங்களை சேர்ந்தவர்கள்தான். ஆனால் எவ்வளவு எளிய பின்னணியில் இருந்து வந்து சாதித்து இருக்கிறார்கள். மன ஊக்கம் தருகிற காணொளி இது. ஒவ்வோரு சாதனை மாணவரும் அவர்களுடைய பின்னணிகளையும் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.
"சிதம்பரம் படிப்ப மட்டும் விட்டுறாத.. உன்கிட்ட காடு இருந்தா புடுங்கிக்குவாங்க..வீடு இருந்தா பறிச்சிடுவாங்க.. உன்கிட்ட பறிக்க முடியாத ஒரே சொத்து படிப்பு தான்".. அசுரன் படத்தில் வரும் இந்த வசனம் எவ்வளவு படிப்பின் வலிமையை ஆழமாக புரிய வைத்திருக்கும்.ஆம் இன்றைக்கு உங்களை சுற்றி உள்ள வறுமை, சாதி வெறி தொடங்கி ஏழை , பணக்காரன் பேதம் வரை அத்தனையையும் அடித்து நொறுக்கும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே..தயவு செய்து படியுங்கள். படிக்க வையுங்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications