ரூ. 1 லட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை.. தங்கத்தில் 24K, 22K,18K.. எது வாங்குவது பெஸ்ட்? பாதுகாப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக வர்த்தகப் போர் தீவிரமடைந்து வருவதால், இந்தியாவில் தங்கம் விலையில் ஏற்றம் தொடர்கிறது. இந்தியாவில் தங்கத்தின் விலை இரண்டே நாட்களில் ரூ. 100 கிராமிற்கு ரூ.20,130 விலை உயர்ந்து உள்ளது. இந்த வார தொடக்கத்தில் தங்கம் விலை சரிந்தபோது மக்கள் பலரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் அதன்பின் மீண்டும் உயர தொடங்கி தற்போது விடாமல் உயர்ந்து வருகிறது.

தங்கத்தின் விலையில் ஏற்படும் இந்த மிகப்பெரிய ஸ்பைக் பல காரணங்களால் ஏற்படுகிறது. இதில் முக்கியமானது அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் ஆகும். இரண்டு பெரிய பொருளாதார வல்லரசுகளும் ஒருவருக்கொருவர் அதிக அளவில் வரிகளை விதிக்கின்றன. அது போக சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க டாலர் குறியீடு 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவை சந்தித்தது, என்று பல காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

gold rate silver investment

ஏப்ரல் 18 வியாழன் நிலவரப்படி, இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 10 கிராமுக்கு 1,140 ரூபாய் உயர்ந்து 97,310 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.. இந்தியாவில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 10 கிராமுக்கு 1,050 உயர்ந்து ரூ. 89,200க்கு விற்பனை ஆகிறது. இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.860 உயர்ந்து ரூ.72,990 ஆக விற்பனை ஆகிறது.

எந்த தங்கம் வாங்குவது பெஸ்ட்?

இதில் 22கே, 24கே, 18கே என்பது தங்கத்தில் செய்யப்படும் கலப்படத்தின் அளவு ஆகும். தூய்மையின் அடிப்படையில் 24 கேரட்தான் சிறந்தது. ஆனால் அதன் விலை அதிகம். அதே சமயம் ஆர்பிஐ விதிகளின் படி நீங்கள் எக்கச்சக்கமாக நீங்கள் தங்கத்தை வைத்துக்கொள்ள முடியாது. அதற்கு என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது.

நீங்கள் வீட்டில் தங்கத்தை ஒரு வரம்பு வரை சேமித்து வைத்தால், யாரும் உங்கள் மீது அதிகாரப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியாது. அதுவே உங்கள் வீட்டில் குறிப்பிட்ட அளவு தங்கத்திற்கு மேல் இருந்தால்.. அந்த தங்கம் வாங்கியதற்கான ஜிஎஸ்டி வரிகள் எல்லாம் தாண்டி.. மற்ற சொத்து வரிகள் வருடா வருடம் கட்டப்பட வேண்டும்.

திருமணமாகாத பெண்கள் - திருமணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கத்தை மட்டுமே வீட்டில் வைத்திருக்கலாம். இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும்.
திருமணமாகாத ஆண்கள்- திருமணமாகாத ஆண்கள் 100 கிராம் தங்கம் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும்.

திருமணமான பெண்கள்- திருமணமான பெண்கள் 500 கிராம் வரை மட்டுமே தங்கத்தை வைத்திருக்க முடியும். இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும்.
திருமணமான ஆண்கள் - அதேசமயம் திருமணமான ஆண்கள் 100 கிராம் தங்கத்தை மட்டுமே வீட்டில் வைத்திருக்க முடியும். இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும்.

அதுவே பெண்கள் 500 கிராம் வரை 22 கேரட் தங்கத்தில் பில் இல்லாமல் வைத்துக்கொள்ள முடியும். அதேபோல் ஆண்கள் 250 கிராம் வரை 22 கேரட் தங்கத்தில் பில் இல்லாமல் வைத்துக்கொள்ள முடியும். உங்கள் வீட்டில் இந்த குறிப்பிட்ட அளவு தங்கத்திற்கு மேல் இருந்தால்.. அந்த தங்கம் வாங்கியதற்கான ஜிஎஸ்டி வரிகள் எல்லாம் தாண்டி.. மற்ற சொத்து வரிகள் வருடா வருடம் கட்டப்பட வேண்டும்.

காரட் தங்கம்

காரட் என்பது தங்கத்தின் தூய்மையை அளக்கப் பயன்படும் ஒரு அலகாகும், இது 9 மற்றும் 24 க்கு இடைப்பட்ட எண்ணாக பொதுவாக இருக்கும். காரட் அதிகமாக இருந்தால், தங்கம் தூய்மையானது.

24 காரட்: தூய தங்கம், வேறு எந்த உலோகமும் இல்லை
18 காரட்: 75% தங்கம் மற்றும் 25% செம்பு அல்லது வெள்ளி போன்ற மற்ற உலோகங்கள்
22 காரட்: 91.67% தூய தங்கம், வெள்ளி, துத்தநாகம், நிக்கல் அல்லது செம்பு போன்ற 2 பாகங்கள் மற்ற உலோகங்கள் சேர்க்கப்படும்.
14 காரட்: 58.3% தூய தங்கம் மற்றும் 41.7% மற்ற உலோகங்கள்
9 காரட் தங்கம் என்பது 37.5% தூய தங்கம் மற்றும் 62.5% வெள்ளி அல்லது தாமிரம் போன்ற மற்ற உலோகங்களின் கலவையாகும்.

இது தூய்மை குறைவான தங்கம் என்றாலும் விலை மிக குறைவாக எல்லோராலும் வாங்கும் வகையில் இருக்கும்.

வருகிறது புதிய தங்கம்

தங்கத்தின் விலை 2024ல் 25% உயர்ந்தது. இதை தொடர்ந்து 2024ல் தங்கத்தின் விலை 22% உயர்ந்துள்ளது. இதனால் இந்தியக் குடும்பங்கள் தங்கத்தை பட்ஜெட்டுக்குள் வாங்குவதற்கு வசதியாக குறைந்த காரட் நகைகளைத் தேர்வு செய்ய தொடங்கி உள்ளனர்.

இதனால் 18 காரட் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர், இது பாரம்பரியமான 22 காரட்டை விட கிட்டத்தட்ட 20% குறைவு. குறைவான விலையில் கிடைக்கும். அதேபோல் இந்தியாவில் விரைவில் 9 கேரட் தங்கத்திற்கு ஹால் மார்க் முத்திரையுடன் அனுமதி அளிக்கப்பட உள்ளது. 2கே கிட்ஸ் தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதால்.. அவர்கள் எளிதில் தங்கம் வாங்குவதை ஊக்குவிக்கும் விதமாக 9 கேரட் தங்கத்திற்கு ஹால் மார்க் முத்திரையுடன் அனுமதி அளிக்க உள்ளனர்.

2022 ஆம் ஆண்டில், 14KT, 18KT, 20KT, 22KT, 23KT மற்றும் 24KT ஆகிய ஆறு தங்க பிரிவுகளுக்கு இந்திய தரநிலைப் பணியகம் (BIS) ஹால்மார்க் செய்வதை கட்டாயமாக்கியது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் ஆகும். இந்தியாவின் தங்க தேவை அடுத்த ஆண்டு 750 டன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை, தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முந்தைய ஆண்டை விட 2024 முதல் பாதியில் இந்திய தங்க தேவை 1.5% அதிகரித்துள்ளது. இதையடுத்தே 9 கேரட் தங்கத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தங்க நகை வர்த்தகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் உட்பட அனைத்து முக்கிய அமைப்புகளுடன் நடந்த இறுதிச் சுற்று ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு சில மாதங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இனி தங்கம் வாங்கும் போது 9 KT தங்கப் பொருட்களுக்கு உடனடி தூய்மைச் சான்றிதழ் வழங்கப்படும். ஆகஸ்ட் 2024 இல் 22 KT தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹68,000 ஆகவும், 9 KT தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹25,000 முதல் ₹30,000 ஆகவும் இருந்தது. ஒப்பீட்டளவில் 9 கேரட் விலை குறைவாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+