குட் நியூஸ்.. கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு.. தமிழக அரசு அதிரடி
கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை
சென்னை: தமிழகத்தில் அங்கன்வாடி நேரடி நியமன பணியில் சட்ட திருத்தம் மேற்கொண்டு விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% வரை இடஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ளது.. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து பல்வேறு அதிரடிகளை கையில் எடுத்து வருகிறது.. அதேபோல சில மாற்றங்களையும் செய்து வருகிறது.
அதில் ஒன்றுதான், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகளுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

கார்டுகள்
கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு பிரத்யேக ரேஷன் கார்டுகள் வழங்க உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு உள்ளது... இது அப்பெண்களுக்கு ஏராளமான நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை கிடைக்கிறது. அதனை தொடர்ந்து அங்கன்வாடி நேரடி நியமன பணியில் சட்ட திருத்தம் மேற்கொண்டு விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% வரை இடஒதுக்கீடு அளிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது...

அங்கன்வாடி
அந்த அறிவிப்பில் உள்ளதாவது: "அதன்படி அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதிகள் நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டுள்ளதுடன் மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணையிட்டுள்ளவாறு இனசுழற்சி முறையிலான இடஒதுக்கீட்டு முறையினை பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தைகள்
அதுமட்டுமல்லாமல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் அவர்கள் தனது கடிதத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் காலிப்பணியிடங்களில், ஆதரவற்ற விதவைகள், விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதிகள் நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

குட்நியூஸ்
இந்த அறிவிப்பானது ஏராளமான பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.. இதனால் வேலைவாய்ப்புகள் பெருகுவதுடன், அவர்களின் வாழ்வாதாரத்துக்கும் வழி செய்யும் விதமாக உள்ளது.. ரேஷன் கார்டுகள் மூலம் சலுகைகளை பெற்று வரும் நிலையில், இந்த அறிவிப்பானது திமுக அரசின் இந்த அறிவிப்பானது திமுக அரசுக்கு மேலும் நற்பெயரை பெற்று தரும்வகையில் உள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications