கிட்ட போயும் மிஸ்ஸாயிடுச்சே.. அப்பாயிண்ட்மென்ட்டை விடுங்க.. தலைவர் குஷி.. சிலுவம்பாளையத்தில் சைலண்ட்
பாஜகவின் மெகா பிளானுக்கு ஓபிஎஸ் நிச்சயம் உதவுவார் என்கிறார்கள்
சென்னை: பாஜக மேலிட தலைவர்கள் தமிழகம் வந்து சென்றதில் இருந்தே ஓபிஎஸ் தரப்பு படுகுஷியிலும், பெருத்த நம்பிக்கையிலும் உள்ளதாம்.. என்ன காரணம்?
விரைவில் எம்பி தேர்தல் வரவுள்ள நிலையில், தென்மண்டலங்களில் குறைந்தபட்சம் 5 தாமரைகளை மலரவைத்து விட வேண்டும் என்ற புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளனராம்.
அந்தவகையில், மொத்தமாக தமிழகத்தில் இருந்து 25 தாமரைகளை டெல்லிக்கு அழைத்து சென்றுவிட வேண்டும் என்பதே பாஜகவின் தற்போதைய திட்டமாக இருக்கிறதாம்.

ஆபரேஷன் சவுத்
அதன்ஒரு பகுதியாகத்தான், ஆபரேஷன் சவுத்தை நோக்கி சீக்ரெட்டாக காய்களை நகர்த்த துவங்கி உள்ளார்கள்.. இதையடுத்துதான், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகம் வருகையானது அமைந்திருந்ததாகவும் தெரிகிறது.. தென்மண்டலங்களில் பாஜகவை ஆழஊன்றி விதைப்பது முதல் 25 தாமரைகளை மலரவைப்பது வரை, அதிமுகவின் தயவு இல்லாமல் எதுவும் நடக்காது என்பதை பாஜக அறியாமல் இல்லை.. அதற்காகவே, ஓபிஎஸ் + டிடிவி தினகரனின் ஆதரவை இழந்துவிடக்கூடாது என்றும் கணக்கு போட்டு வருகிறது.. இந்த கணக்குகளை ஓபிஎஸ் தரப்பு அறியாமல் இல்லை.. எந்தவகையிலாவது எடப்பாடியுடன் பஞ்சாயத்து செய்து, தன்னை இணைத்துவைத்துவிடும் என்று பலமாக நம்பி கொண்டிருக்கிறது.

அப்பாயிண்ட்மென்ட்
தங்கள் தேர்தல் கணக்குகளை முன்னிறுத்தி, பாஜக தலைவர்கள் தமிழகம் வந்து சென்றாலும்கூட, ஓபிஎஸ் டீமுக்கு பெருத்த பலம் கூடியுள்ளதாம்.. இத்தனைக்கும், பிரதமர் மோடியும் சரி, அமித்ஷாவும் சரி, ஓபிஎஸ்ஸை தனியாக அழைத்து பேசவேயில்லை.. ஓபிஎஸ் தங்களின் அபிமானி என்றாலும்கூட, அவரை சந்திக்க மேலிடம் கடைசிவரை டைம் ஒதுக்கவில்லை.. இவர்கள் நினைத்திருந்தால், எடப்பாடி & ஓபிஎஸ்ஸை தனித்தனியாகவே ஏர்போர்ட்டிலேயே சந்தித்து பேசியிருக்க முடியும்.. ஆனால், ஒருங்கிணைந்த அதிமுக தேவை என்பதை வலியுறுத்தவே, இவ்வாறு தனித்தனியாக பேசிவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

பிளஸ் பாயிண்ட்ஸ்
அப்படி இருந்தும்கூட, சில பிளஸ் பாயிண்ட்கள் ஓபிஎஸ் பக்கம் எகிறி உள்ளதாம்.. முக்கியமாக, எடப்பாடியை காலி செய்யக்கூடிய நபர்களை மேற்கு மண்டலத்தில் ஓபிஎஸ் பெரும்பாலும் நியமித்துவிட்டார்.. உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிட்டு, அதிமுகவில் இணைய சொல்லும் பட்சத்தில் அது தனக்கே பலம் என்று ஓபிஎஸ் நினைக்கிறார்.. அல்லது பாஜக தன்னுடனான இணக்கத்தை கைவிடாத நிலையில், அங்கு பதவி கிடைத்தாலும், அதுவும் பிளஸ்தான் என்று நினைக்கிறாராம்.. அதேபோல, பாஜக மேலிடம் சசிகலாவை எப்படியும் முன்னிறுத்த வாய்ப்பில்லாத பட்சத்தில், அதுவும் தனக்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட்டாக ஓபிஸ் கணக்கு போடுகிறார்.

விதை விதை
முக்கியமாக, மிகப்பெரிய அளவிலான ஆதரவு எடப்பாடிக்கு இருப்பது போல், நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் பலம் தனக்கு இல்லை என்பதால், எடப்பாடி தரப்பை துணிச்சலாகவும், வெளிப்படையாகவும் எதிர்க்கவும் முடிவு செய்துவிட்டாராம்.. அதனால்தான், எடப்பாடி பற்றின ரகசியங்களை வெளியிட போகிறோம் என்று ஓபனாகவே ஓபிஎஸ் டீம் சொல்ல ஆரம்பித்துவிட்டது.. அமமுகவின் முக்கிய தூணாக இருந்த மறைந்த வெற்றிவேல்தான் முன்பெல்லாம் இந்த வியூகத்தை கையில் எடுப்பார்.. ஆடியோ வெளியிட போவதாக மிரட்டி கொண்டே இருப்பார்.. சில சமயம் திடுதிப்பென்று ஏதாவது ஆடியோவை வெளியிட்டு கதிகலங்க வைக்கவும் செய்துவிடுவார்.

சிலுவம்பாளையம்
அதே ரூட்டில் ஓபிஎஸ் டீம் என்ட்ரி தந்துள்ளது டர்னிங் பாயிண்ட்டாக அமைந்துள்ளது... கட்சி நலனுக்காகத்தான் இத்தனை நாளும், எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு இருந்தோம், இனி சிலுவம்பாளையம் பழனிசாமி குறித்த ரகசியங்கள் "அப்பப்போ, அப்பப்போ" வெளிவரும் என்றும் பீதியை கிளப்பி தொடங்கிவிட்டார்கள்.. அதுமட்டுமல்ல, இந்த 6 மாத உட்கட்சி பூசலால், அதிமுகவுக்குள் இருக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா தரப்பினர் ஓபிஎஸ் பக்கம் சாய துவங்கி உள்ளதையும் தனக்கான பலமாகவே ஓபிஎஸ் கருதுகிறாராம்.. மொத்தத்தில் பாஜகவும் நம்மை கைவிடாது என்ற நம்பிக்கையில் அடித்து விளையாட துவங்கி உள்ளாராம் ஓபிஎஸ்..!!
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications