நான் முதல்வன் திட்டம்! 25 ஆயிரம் மாணவர்களுக்கு அசோக் லேலண்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை! அசத்தல்
சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை 25 ஆயிரம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அது போல் அவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ 2 லட்சம் முதல் ரூ 8 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைகளைப் பெறுவதற்கு அரசு உதவி வருகிறது.

குறிப்பாக கடந்த ஜூன் 18ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த 25,888 மாணவர்கள் மாநில அளவில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளில் வேலை பெற்றுள்ளனர்.
நடப்பாண்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (Tamil nadu Skill development corporation)சார்பில் ஓலா, தனது எலக்ட்ரிக் வாகன ஆலைகளுக்கு பாலிடெக்னிக் மாணவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. அது போல் Accenture, Amazon, Ashok Leyland, BOSCH, Caterpiller India, Daikin, Ford, HCL Tech மற்றும் L and T உள்ளிட்ட நிறுவனங்களும் பாலிடெக்னிக் மாணவர்களை வேலைக்கு சேர்த்துள்ளன.

இவர்களுக்கு ஆண்டு வருமானமாக ரூ 2 லட்சம் முதல் ரூ 8லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். இதுவரை 252 கல்லூரிகள் நான் முதல்வன் வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில் 58 ஆயிரம் மாணவர்கள் இறுதியாண்டு படித்து வருவதால் வேலை வாய்ப்புகளுக்கான நடைமுறைகள் தொடரும் என கல்வித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவு அமைச்சர் உதயநிதியால் கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக SSC cum RAILWAYS மற்றும் BANKING பணிகளுக்கான கட்டணமில்லா ஆறு மாதக்கால உறைவிடப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நான் முதல்வன் SSC cum RAILWAYS மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிடப் பயிற்சியினை" துவங்கவுள்ளது. இப்பயிற்சிக்கான 1000 பயனாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக 14.07.2024 அன்று இருவேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தவுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கித் தேர்வுக்களுக்கான பயிற்சி அல்லது SSC cum RAILWAYS தேர்வுக்களுக்கான பயிற்சி, இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும். இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள். https://www.naanmudhalvan.tn.gov.in அறிவிக்கையைப் படித்துப் பார்த்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 23 ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது.
இந்த பயிற்சி அளிப்பதற்கான பயிற்சி நிறுவனங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் டெண்டர் கோரி உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பயிற்சி நிறுவனங்கள் ஜூலை 12ஆம் தேதி மாலை 3 மணிக்குள் இணையதளம் மூலமாக டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான விரிவான மற்றும் பயனுள்ள வழிகாட்டுதலை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு முயற்சியாக வளர்ந்து வருகிறது. பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளின் கூட்டு முயற்சிகள் மூலம் தமிழ்நாட்டில் உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (GER) கணிசமான அதிகரிப்பைக் காண முடியும் என்ற நம்பிக்கையால் இது இயக்கப்படுகிறது.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்!












Click it and Unblock the Notifications