கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தில் 25 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு அமல்!
சென்னை: தமிழகத்தில் 25 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. அதாவது நள்ளிரவு முதல் இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது. இதனால் ரூ 5 முதல் 150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும்.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் இவை வருகின்றன.

இந்த அமைச்சகம் நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து வருகிறது. இந்த சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தத்தின் படி 1992 ஆம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அது போல் 2008ஆம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு செப்டம்பர் மாதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் லோக்சபா தேர்தல் நடந்ததால் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மாறாக ஜூன் மாதத்தில் 42 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
மீதமுள்ள 25 சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் மாதம் முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் என சொல்லப்பட்டது. அந்த வகையில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த கட்டண உயர்வு, அமலுக்கு வந்தது. இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளின் கூறியதாவது: இந்த கட்டண உயர்வு 10 சதவீதம் வரை இருக்கும்.
வாகனத்தின் வகையை பொருத்து ரூ 5 முதல் ரூ150 வரை கட்டண உயர்வு இருக்கும். பண்டிகை, விடுமுறை நாட்களில் தனியார் வாகனங்கள் அதிகமாக செல்வதால் சுங்கக் கட்டண வருவாய் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகள் 2023- 2024 ஆம் ஆண்டில் ரூ 4,221 கோடியை வசூலித்துள்ளன.
இது 2022-2023 ஆம் ஆண்டு ஆண்டில் வசூலிக்கப்பட்ட ரூ 3,817 கோடியை விட 10 சதவீதம் அதிகம். அகில இந்திய அளவில் தமிழகத்தின் சுங்க கட்டண வருவாய் 5ஆவது இடத்தில் உள்ளது என தெரிவித்தனர். அந்த வகையில் விக்கிரவாண்டி, கொடை ரோடு, மணவாசி, மேட்டுப்பட்டி, மொரட்டாண்டி (புதுச்சேரி) உள்ளிட்ட 25 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.
இந்த சுங்கச் சாவடி கட்டணங்கள் உயர்வதால் சரக்குகளை கையாளும் வாகனங்கள் அதிக கட்டணம் செலுத்த நேரிடும். சென்னைக்கு காய்கறி, மளிகை பொருட்கள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக் கூடும் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications