உடலுறவு.. பிணவறையில் பெண்ணின் சடலத்தை இழுத்து சென்ற காமுகன்,.. அதுவும் அரசு மருத்துவமனையில்.. கொடுமை
சென்னை: சமீபகாலமாகவே வன்முறை சம்பவங்களும், பாலியல் கொடூரங்களும் பெருகி விட்டன.. குழந்தைகள் முதல் வயதான பாட்டிகள் வரை காமுகர்களிடம் சிக்கி பலாத்காரங்களுக்கு ஆளாகும் கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன.. அதிலும் சில காம வெறியர்கள், இறந்த சடலத்தைகூட விட்டு வைக்காமல், உடலுறவு கொள்ளும் பயங்களும் பெருகி வருகின்றன.. பெரும்பாலும் வடமாநிலங்களில் இதுபோன்ற புகார்கள் வருகின்றன.. இப்போதும் ஒரு வீடியோ இணையத்தில் பரவி, காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில்
ஏப்ரல் 18, 2024-ல் இந்த சம்பவம் நடந்துள்ளது..

இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளிலும் பதிவாகி உள்ளது.. சம்பவத்தன்று நள்ளிரவு, நீலேஷ் பில்லாலா என்ற 25 வயது நபர், பிரேதப் பரிசோதனை மையத்திற்குள் நுழைகிறார்.. அங்கிருந்த ஒரு சடலத்தை ஸ்ட்ரெச்சரில் இருந்து இழுத்து, ஒரு மூலைக்கு இழுத்து செல்கிறார்.. கேமராவின் பார்வையில் படாதவாறு, அங்கு வைத்து அந்த சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்கிறார்..
பிறகு சடலத்தை மீண்டும் ஸ்ட்ரெச்சருக்கு அருகில் வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி செல்கிறார்.. கக்னர் சமூக சுகாதார நிலையத்தின் மார்ச்சுவரி ரூமில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தக் காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பொதுமக்களின் கண்டனங்களுக்கும் ஆளாகியது.
சம்பவம் நடந்து பல மாதங்களுக்கு பிறகே, அதாவது அக்டோபர் மாதத்தில்தான் மருத்துவமனை ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இந்தச் செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது..
இதை பார்த்து ஒட்டுமொத்த மருத்துவமனையும் அதிர்ச்சியில் உறைந்தது.. உடனடியாக இதுகுறித்து, மருத்துவ அதிகாரி டாக்டர் ஆதியா தாவர், கடந்த 7ம் தேதி போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நீலேஷ் பில்லாலாவை கைது செய்தனர்.. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் அரசு மருத்துவமனையின் பிணவறையில், பெண் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பெரும் பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது.
சமீபத்தில் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்தது குறித்த வழக்கு ஒன்றில், சத்தீஸ்கர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
நீதிபதிகள் இதுகுறித்து கூறும்போது, "ஒரு சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்தது, நாம் நினைக்கும் மிகக் கொடூரமான குற்றங்களில் ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஐபிசியின் பிரிவுகள் 363, 376(3), போக்சோ சட்டத்தின் பிரிவு 6, 2012 மற்றும் 1989 சட்டத்தின் பிரிவு 3(2)(வி) ஆகியவற்றின் கீழ் இறந்த உடலுடன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்காக இதை கருதமுடியாது.
அந்த சட்டத்தின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிக்க முடியாது என்பதே உண்மை. மேற்கூறிய பிரிவுகளின் கீழ் ஒரு குற்றத்தை நிரூபிக்க, பாதிக்கப்பட்டவர் உயிருடன் இருக்க வேண்டும். அதனால், சடலத்துடன் உடலுறவு கொள்வதை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது" என்று கூறிய நீதிபதிகள், பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்து உத்தரவிட்டது நினைவு கூரத்தக்கது.












Click it and Unblock the Notifications