புதிய பாம்பன் பாலம் இன்று முதல் திறப்பு எதிரொலி.. ராமேஸ்வரம் வரை மீண்டும் 26 ரயில் சேவைகள்.. விவரம்
சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலம் ரூ.550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை, பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். முன்னதாக, பாலம் கட்டுமான பணி காரணமாக ராமேஸ்வரம் செல்ல வேண்டிய ரெயில்கள் மண்டபம் வரையில் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று பாம்பன் ரயில் பாலம் திறக்கப்பட உள்ளதால், மீண்டும் ரயில்கள் ராமேஸ்வரம் வரையில் இயக்கப்பட உள்ளன. அந்த வகையில் 26 ரயில் சேவைகள் மீண்டும் ராமேஸ்வரம் வரை இயக்கப்பட உள்ளன.
ராமநவமி நாளான ஏப்ரல் 06 அன்று பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதுடன், ராமேஸ்வரம் முதல் தாம்பரம் வரையிலான பாம்பன் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்ட புதிய தினசரி ரயில் சேவையையும் தொடங்கி வைக்க உள்ளார். புதிய பாம்பன் எக்ஸ்பிரஸ் தினசரி பிற்பகல் 03.35 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக அதிகாலை 03.10 மணியளவில் தாம்பரம் சென்றடையும்.

மறு மார்க்கமாக ரயில் எண் 104 தினசரி மாலை 06.05 மணியளவில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைபூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக அதிகாலை 05.45 மணியளவில் ராமேஸ்வரம் வந்தடையும். இந்த ரயில் தவிர ஏற்கனவே ராமேஸ்வரம் வரை இயக்கப்பட்ட ரயில்கள், பாம்பனை தாண்டி இனி ராமேஸ்வரம் வரை மீண்டும் இயக்கப்பட உள்ளன.
அந்த வகையில், ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சிக்கு நாளை (திங்கட்கிழமை) மதியம் 2.50 மணிக்கு விரைவு ரயில் புறப்படுகிறது. மறுமார்க்கமாக, திருச்சியில் புறப்படும் விரைவு ரெயில் ராமேசுவரத்துக்கு நாளை பகல் 12.25 மணிக்கு வருகிறது.
அதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு நாளை மாலை 5.30 மணிக்கு விரைவு ரயில் புறப்படுகிறது. மேலும், கோவையில் புறப்படும் ரயில் வருகிற 8-ந் தேதி காலை 6.15 மணிக்கு ராமேஸ்வரத்துக்கு வருகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து கோவைக்கு வருகிற 9-ந் தேதி இரவு 7.30 மணிக்கு விரைவு ரயில் புறப்பட்டு செல்கிறது.
ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில் நாளை ராமேஸ்வரத்தில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக மதுரை-ராமேஸ்வரம் ரெயில் காலை 10.45 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடைகிறது. பின்னர், காலை 11.40 மணிக்கு மீண்டும் மதுரை புறப்பட்டு செல்கிறது. இவைகள் உள்பட மொத்தம் 28 ரெயில் சேவைகள் புதிய பாம்பன் பாலம் வழியே ராமேஸ்வரத்துக்கு இயக்கப்பட உள்ளன.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications