சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அவருக்கு என்னாச்சோ".. பதறி அடித்து ஓடிய மனைவி.. 26 வயசுதான்.. சென்னையில் நடந்த கொடுமை!

சென்னையில் பஸ் மோதி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்

Google Oneindia Tamil News

சென்னை: "அவருக்கு என்னாச்சோ" என்று பதறி போய் விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கணவனை சந்திக்க சென்ற மனைவியே விபத்தில் சிக்கி உயிரிழந்த கொடுமை சென்னையில் நடந்துள்ளது.

சென்னை அயனாவரம் சாலையில் ஒரு பெண் டூவீலரில் கீழ்ப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.. அப்போது, பின்னாடியே வந்த அரசு பஸ் ஒன்று டூவீலர் மீது பின்புறமாக மோதிவிட்டது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார் அந்த பெண்... பின்பக்கமாக விழுந்ததில் தலை அப்படியே தரையில் மோதி நொறுங்கியது.. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 சென்னை

சென்னை

காலை நேரத்தில், பரபரப்புக்கு நடுவே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதை கண்டு பொதுமக்கள் அலறினர்.. உடனடியாக போலீசார் விரைந்து வந்து, அந்த பெண் யார் என்ன என்ற விசாரணயில் இறங்கினர்.. அவரது ஹேண்ட் பேக்கை பரிசோதித்தபோது, ஐசிஎப் பகுதியை சேர்ந்த மிஸ்ஜா என்பதும் வயசு 26 என்பதும் தெரியவந்தது.

விசாரணை

விசாரணை

இதையடுத்து, மிஸ்ஜாவின் உடலை போக்குவரத்து போலீசார் போஸ்ட் மார்ட்டம் செய்ய கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. இதுகுறித்து திருமங்கலம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த மிஸ்ஜாவின் கணவர் விபத்தில் ஏற்கனவே சிக்கி அதே கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

டூவீலர்

டூவீலர்

அவருக்கு என்ன ஆச்சோ, எப்படி இருக்காரோ என்ற தவிப்பில், கணவரை பார்க்க கிளம்பி வந்துள்ளார் மிஸ்ஜா.. அப்போதுதான் அவரும் விபத்துக்குள்ளாகி இருப்பது தெரியவந்தது.. இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய புதூர் ரூட் செல்லும் மாநகர பஸ்ஸை போலீசார் பறிமுதல் செய்ததுடன், சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் சுந்தர்ராஜனையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

போராட்டம்

போராட்டம்

ஆனால், மிஸ்ஜாவின் மரணம் பெரும் பரபரப்பை அந்த பகுதியில் ஏற்படுத்திவிட்டது.. கண்ணெதிரே இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்ததை கண்ட பொதுமக்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்... அதே தாகூர் நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அங்குள்ள திருப்பத்தில் நிறைய விபத்துக்கள் தொடர்ந்து நடப்பதாகவும், இதனால் பல உயிர்கள் அநியாயமாக உயிரிழப்பதாகவும் கூறி ஆவேசமாக குரல் எழுப்பினர்.

 ஸ்பீடு பிரேக்

ஸ்பீடு பிரேக்

அந்த பகுதியில் ஒரு ஸ்பீடு பிரேக் வைத்திருந்தால், இந்த கொடுமையான மரணங்கள் நிகழ்ந்திருக்காது என்றும் குமுறினர்.. இதனால் அந்த பகுதியே பரபரப்பாகிவிட்டது.. இந்த தகவலறிந்த அயனாவரம் போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து போராட்டத்தை கைவிட செய்தனர். கணவர் விபத்தில் சிக்கி சிகிச்சை பெறும்நிலையில், அவரை காண விரைந்த மனைவியும் விபத்தில் சிக்கி சடலமாக கிடப்பதை கண்டு உறவினர்கள் கதறி அழுது வருகின்றனர்!

English summary
26 year old woman died in road accident near Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X