Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனாதன ஒழிப்பு.. அமைச்சர் உதயநிதிக்கு புதிய சிக்கல்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு போன பரபர கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு என்பது பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அடுக்கடுக்கான புகார்களோடு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டுக்கு 263 பேர் புகார் கடிதம் எழுதியுள்ளனர். இதனால் விரைவில் தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். இவர் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் தான் சமீபத்தில் சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னையில் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சில நாட்களுக்கு முன்பு சனாதன ஒழிப்பு என்ற பெயரில் மாநாடு நடந்தது.

262 people including retired judges complaint against Udhyanidhi stalin to Supreme court Chief Justice

இதில் உதயநிதி ஸ்டாலின், ‛‛ சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்காக எனது வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம்'' என்றார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் அமித்ஷா முதல் பாஜக முதல்வர்கள் உள்பட பல தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். அதோடு போலீஸ் நிலையங்களிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த விவகாரம் என்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் வரை சென்றுள்ளது. அதாவது உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் உள்பட 262 பேர் கையெழுத்திட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டுக்கு பரபரப்பான கடிதம் எழுதி உள்ளனர்.

மதவெறுப்பு பேச்சு விஷயத்தில் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டி கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த கடிதம் என்பது டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ்என் திங்ரா மற்றும் முன்னாள் மத்திய கப்பல் போக்குவரத்து செயலாளர் கோபால கிருஷ்ண ஐஏஎஸ் ஆகியோரின் ஒருங்கிணைப்பின் கீழ் எழுதப்பட்டுள்ளது. கடிதத்தில் மொத்தம் 14 நீதிபதிகள், 130 ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்(20 பேர் தூதர்களாக இருந்தவர்கள்), 118 பேர் பாதுகாப்பு படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் என மொத்தம் 262 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மதவெறுப்பு தொடர்பான விஷயத்தில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தகைய சூழலில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசியது கவலையளிக்கும் வகையில் உள்ளது. மேலும் இந்தியா என்பது மதசார்பற்ற நாடு என்ற அடிப்படை கருத்துக்கு எதிரானதாக பேசி இருக்கிறார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு என்பது மதவெறுப்பு சார்ந்து உள்ளது. ஆனால் தமிழகத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படாமல் உள்ளது. அதோடு தமிழகத்தை ஆட்சி செய்வோர் அவரது பேச்சை நியாயப்படுத்தி வருகின்றனர். இதனால் உச்சநீதிமன்றம் தலையிட்டு தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

பொதுவாக குறிப்பிட்ட ஒரு பிரச்சனை இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் நேரத்தில் அதுதொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தும். மேலும் சில நேரங்களில் ஏதேனும் பிரச்சனைகள் குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பலர் கடிதம் எழுதியதும், அதன்பிறகு அந்த விவகாரம் பற்றி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த சம்பவங்களும் நடந்துள்ளன.

இதனால் சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சு தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தாமாக முன்வந்து வழக்காக விசாரிப்பாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கான பதிலை அறிய நாம் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+