2ஜி அலைக்கற்றை விவகாரம்.. வினோத் ராய் மூலம் சதித்திட்டம்.. புட்டுபுட்டு வைக்கும் திமுக எம்.பி. ஆ.ராசா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2014ல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை அகற்றுவதற்காக 2ஜி அலைக்கற்றை மூலம் சதித்திட்டம் தீட்டினார்கள் என்று ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.

2010ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் அறிக்கை வெளியிட்டார். இதனையடுத்து அலைக்கற்றை ஏலத்தில் 1.76 லட்சம் கோடி ஊழல் என செய்தி நாடு முழுவதும் வெளியானது.

2ஜி வழக்கு

2ஜி வழக்கு

இதனைத்தொடர்ந்து அப்போது தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. பின்னர் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வருவாய் இழப்பும் ஏற்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

5ஜி ஏலம்

5ஜி ஏலம்

இதனிடையே 5ஜி அலைக்கற்றை ஏலம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, 2ஜி அலைக்கற்றையில் குரல் மட்டும்தான் சென்றடையும். 3ஜி அலைக்கற்றை மூலம் வீடியோக்களை பார்க்க முடிந்தது. 4ஜி அலைக்கற்றையில் அதன் திறன் இன்னும் அதிகரித்தது.

 ஆ.ராசா குற்றச்சாட்டு

ஆ.ராசா குற்றச்சாட்டு

5 ஜி அலைக்கற்றை அதனை விட இன்னும் திறன் வாய்ந்தது. 5ஜி அலைக்கற்றையில் நாம் தேடும் விஷயங்கள் ஒரு நொடியில் வந்துவிடும். அதிக திறன் அடிப்படையில் பார்த்தால் 5ஜி அலைக்கற்றை ஏலம் 5 லட்சம் கோடி அல்லது 6 லட்சம் கோடிக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் ஒன்றரை லட்சம் கோடிக்குதான் சென்றிருக்கிறது. 5 லட்சம் கோடி எதிர்பார்க்கப்பட்டதாக மத்திய அரசுதான் கூறியது.

இதனால் 4-5 நிறுவனங்களுடன் சேர்ந்து மத்திய அரசு கூட்டு சதி செய்துவிட்டதா. அவை குறித்து விசாரிக்க வேண்டும். எங்கு தவறு நடந்திருக்கிறது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும். விசாரிக்கவில்லை என்றால் அடுத்து ஆட்சியமைக்கும் போது விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

வினோத் ராய்

வினோத் ராய்

தொடர்ந்து, 2ஜி புகார் ஒரு பெரிய மோசடி. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதற்காக வினோத் ராய் என்கிற தனிமனிதனை பயன்படுத்தி, சிஏஜி என்கிற அரசியல் சட்ட அமைப்பைப் பயன்படுத்தி, அதற்கு பின்னால் இருந்தவர்கள் மிகப்பெரிய சதியை தீட்டினார்கள். இதனை நான் எழுதிய புத்தகத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன். அதற்கு வினோத் ராயிடமிருந்து இதுநாள் வரை எந்த பதிலும் இல்லை என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+