பெரியார் சொன்ன இந்த வரிகளை அதிகமாக பின்பற்றுவது 2k கிட்ஸ் தான்.. உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!
சென்னை: யார் என்ன சொன்னாலும், உன் அறிவிற்கும் எட்டினால் மட்டுமே ஏற்றுக் கொள் என்ற பெரியாரின் வார்த்தைகளை 2கே கிட்ஸ் மிகச்சிறப்பாக பின் தொடர்வதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார். சமகால இளைஞர்கள் அதிக அறிவுடனும், ஆற்றலுடன் இருப்பதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், படிப்பு மட்டுமே மாணவர்களின் வாழ்க்கையை மாற்றும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு 2025 என்ற திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கல்வி மட்டும்தான் மாணவர்களின் வாழ்க்கையை மாற்றும். இந்தியாவில் அதிகம் பேர் உயர்கல்வி படிக்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது.

நாட்டின் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் சதவிகிதம் 29 மட்டும்தான். அது தமிழ்நாட்டில் 52 சதவிகிதமாக உள்ளது. 2கே கிட்ஸ்களுக்கு அட்வைஸ் செய்தால் பிடிக்காது என்று தெரியும். தந்தை பெரியார் அடிக்கடி ஒன்றை சொல்வார்கள். யார் எதை சொன்னாலும், அதனை எப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்க வேண்டும்.
அப்படி கேள்வி கேட்ட பின், உன்னுடைய பகுத்தறிவிற்கும், அறிவிற்கும் எட்டினால் மட்டும் ஏற்றுக் கொள் என்று கூறுவார். தந்தை பெரியாரின் வார்த்தைகளை யார் பின்தொடர்கிறார்களோ இல்லையோ, இங்குள்ள Gen Z இளைஞர்கள் அதிகமாகவே பின் தொடர்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த கால இளைஞர்கள் அறிவுடனும், ஆற்றலுடன் இருக்கிறார்கள்.
பள்ளிக் கல்வியை முடித்து, உயர்கல்விக்கு செல்லப் போகிறீர்கள். உங்களுக்கு பத்திரமான எதிர்காலத்தை அமைத்து கொடுப்பதே கல்லூரி கனவு திட்டம். பள்ளிக்கல்வியின் போது 10 மற்றும் 12 ஆகிய தேர்வு முடிவுகள் தான் வாழ்க்கையை முடிவு செய்யும் என்று பெற்றோர், ஆசிரியர்கள் என்று அனைவரும் கூறுவார்கள். கல்வி மட்டுமே வாழ்க்கையை மாற்றுவதற்கான ஒரே புள்ளி.
100 ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கூட வாசலை மிதித்திருக்க மாட்டார்கள். இன்று லட்சக்கணக்கானோர் உயர்கல்வி செல்லப் போகிறோம். இன்று பள்ளிக்கல்விக்கும், உயர்கல்விக்கும் ஏராளமான திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்ப்புதல்வன், புதுமைப் பெண் திட்டம் மூலமாக மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications