3 குற்றவியல் நடைமுறை சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.. அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூன்று குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், மத்திய அரசு நிறைவேற்றிய கடிதங்கள் குறித்து போதிய அவகாசம் தரப்படவில்லை என்று முதல்வர் முக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார் .

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்சய சட்டம் ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்களும் கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது.

Tamil Nadu MK Stalin Amit Shah Criminal Law

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக இந்த புதிய சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு இந்த மூன்று சட்டங்களிலும் பல புதுமையான யோசனைகள் உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறியது.

இந்த நிலையில், புதிய குற்றவியல் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு நிறைவேற்றிய 3 சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவகாசம் தரப்படவில்லை. குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.

3 குற்றவியல் சட்டங்களில் சில அடிப்படை பிழைகள், முரண்பாடுகள் உள்ளன. அனைத்து துறைகளுடனும் ஆலோசித்து அமல்படுத்த போதிய கால அவகாசம் தேவை. சட்டங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடபட்டுள்ளன. சட்டத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பது அவசியம். சமஸ்கிருதத்தில் சட்டத்தின் பெயர்கள் இருப்பது அரசியல் அமைப்பு 348 ஐ மீறுவது ஆகும். சட்டங்களை நடைமுறைப்படுத்த கல்வி நிறுவனங்களுடன் விவாதம் செய்து சட்ட பாடங்கள் மாற்றியமைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+