3 கோடி அப்பு. ! மெர்சிடிஸ் பென்ஸ் வாங்கிய விவசாயி? யாரா அந்தப் பையன்?
சென்னை: வட இந்தியாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் 3 கோடி மதிப்புள்ள ஆடம்பரமான கார் ஒன்றை வாங்கியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
ஒருவர் வைத்திருக்கும் காரை வைத்துத்தான் அவர் எந்தளவுக்குப் பணப் பலம் படைத்தவர் என்பதை சமூகம் தீர்மானிக்கிறது. நானோ கார் வாங்கவே வழியில்லாமல் தவிக்கும் மக்கள் இந்தியாவில் இன்னும் கோடிக் கணக்கில் இருக்கிறார்கள். மூன்று வேலை உணவு என்பது கூட பலருக்கும் இன்றுகூட கனவாகவே இருக்கிறது. அப்படியான காலத்தில் விவசாயி ஒருவர் 3 கோடி ரூபாய் செலவழித்து ஆடம்பரமான கார் வாங்கி இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா உங்களால்? நம்பித்தான் ஆக வேண்டும். இந்தச் சம்பவம் இந்தியாவில்தான் நடந்து இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் என்பது கார் அல்ல. அது ஆடம்பரமான உலகத்திற்காக அடையாளம். அப்படித்தான் இந்தச் சமூகம் பார்க்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் காருக்கு ஜி கிளாஸ் என்ற இன்னொரு பெயர் கூட இருக்கிறது. உலகில் உள்ள பல கார்ப்பரேட் முதலாளிகள் பண்ணை வீட்டை அலங்கரிக்கும் இந்த உயர் ரக வாகனத்தைத்தான் ஒரு விவசாயி விலை பேசி வாங்கி இருக்கிறார்.
தலையில் வடநாட்டுக்காரர்களுக்கே உரிய முண்டாசு கட்டியவர் மெர்சிடிஸ் ஷோ ரூமுக்குள் வேட்டி கட்டிக் கொண்டு வந்து வண்டியைச் சோதனை செய்யும் காட்சி இன்ஸ்டாகிராமில் வைரலாகி இருக்கிறது. இந்த விவசாயி எப்படி இந்தளவுக்காகப் பணத்தைச் சம்பாதித்தார்? அந்தளவுக்கு விவசாயத்தில் பணம் கிடைக்கும் அளவுக்கு இவர் பெரிய பண்ணையாரா? என்று பலரும் ஆராயத் தொடங்கினர். அப்போதுதான் அதற்குள் ஒரு உணர்ச்சிகரமான கதை இருப்பதைப் பலரும் உணர்ந்தனர்.
தன்னைப் படித்து ஆளாக்கி பெரிய வேலையில் உட்காரவைத்த தந்தைக்கு நன்றிக் கடனாக அவரது மகன் வாங்கிக் கொடுத்துள்ளார். கையில் தங்க பிரேஸ்லெட், விரல்களில் மோதிரம் என இந்த விவசாயி பார்க்கவே கம்பீரமாக இருக்கிறார். கூடவே அவரது மனைவியும் கார் வாங்க வந்துள்ளார். ஷோ ரூமுக்குள் கற்பூரம் கொளுத்தி வாகனத்திற்கு ஒரு படையலைப் போடுகிறார் தாய். அதன்பின் அந்த விவசாயி தந்தை அதைக் கம்பீரமாக ஓட்டிச் செல்கிறார். அவரது மகன்கள் இருவர் உட்பட பலரது முகத்தில் ஒரு நூற்றாண்டு மகிழ்ச்சி வெளிப்படுவதை அந்த வீடியோவில் காண முடிகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் புகழ்பெற்ற கெலாண்டேவாகன் இந்தியாவில் இரண்டு வடிவங்களில் விற்பனையாகிறது. அதில் G400d டீசல் எஞ்சின் கொண்டது. அடுத்தது G63 AMG மாடல். இந்த இரண்டு மாடலும் அட்வென்ச்சர் வரிசை. கரடுமுரடான மலையேற்றம் பாலைவனப் பகுதிகளில் சீறிப் பாயும் திறன் கொண்டவை இவை. இந்த இரு மாடல்களும் தலா ரூ. 2.55 கோடிக்கு மேல் வரும். அதில் வரிகள் ஆகியவற்றைச் சேர்த்தால் ஆன் ரோடு விலை ரூ.3 கோடி வரும்.
இவ்வளவு விலை உயர்ந்த வாகனத்தை வாங்க இந்த விவசாயி ஷோ ரூம் உள்ள வரும்போது அங்கே உள்ள ஊழியர்களுக்கு நம்பிக்கையே இல்லை. அவர் பணத்தைக் கொடுத்து ஆவணத்தில் கையெழுத்துப் போடும் போது நம்மைப் போலவே அவர்களும் அசந்துப் போய் நின்றனர். இந்த விவசாயியின் மகன்கள் இருவரும் கோட் சூட் போட்டு கார்ப்பரேட் அதிகாரி தோற்றத்தில் இருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த விவசாயியின் மகன் கிரிஷ் குர்ஜார் என்பவர்தான் இந்த வீடியோவை அவரது பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதை 522,641 பேர் லைக் செய்துள்ளனர். ஆயிரக் கணக்கான பேர் வாழ்த்து மழையால் இந்த மகனை நனைய வைத்துள்ளனர். அந்தப் பதிவில் 'அப்பா உடன் நிற்பதைப் பெருமையாகக் கருதுகிறோம்" என்று அந்த மகன் தெரிவித்துள்ளார். மேலும் தன்னைப் பற்றிய குறிப்பில் நான் ஒன்று ஸ்பெஷலான ஆள் இல்லை. நான் வரையறுக்கப்பட்ட பதிப்பு என்று அடக்கமாகக் கூறியுள்ளார் இவர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications