தமிழக அரசு ஊழியர்களே குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உயர்வு இந்தாண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் முன்தேதியாக கணக்கிட்டு வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 9 சதவீதமாக இருந்தது. தற்போது 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 12 சதவீதமாக அதிகரித்துள்ளது குறி்ப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications