சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சூப்பர்ப் பவர்".. டபுள் ரூட், டபுள் குஷியில் எடப்பாடி.. இப்படியும் ஓகே, அப்படியும் ஓகே.. அப்ப அவர்?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து எடப்பாடி என்ன முடிவெடுக்க போகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: இரட்டை இலை முடக்கப்படுமா? அல்லது வழங்கப்படுமா? அப்படியே வழங்கினாலும் யாருக்கு கிடைக்கும்? என்ற பல்வேறு கவலைகள் ரத்தத்தின் ரத்தங்களிடம் சூழ்ந்து வரும்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு, மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ், நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்திருந்தார். அதிமுக விவகாரம் குறித்து அவரிடம் கேட்டதற்கு, தன்னுடைய பாணியிலேயே, ஒரு பதிலை நமக்கு சொல்லி இருந்தார்..

"அதிமுக இப்போது 4 ஆக பிரிந்து விட்டது.. 4 கட்சியாகிவிட்டது.. அந்த 4 கட்சியையும் இணைத்து கொள்வதுதான் "மெகா கூட்டணி" என்று பெயர்.. பழனிசாமியுடன் கூட்டணி, பன்னீர்செல்வத்துடன் கூட்டணி, சசிகலாவுடன் கூட்டணி, தினகரனுடன் கூட்டணி என 4 கட்சிகளுடனும் பாஜக கூட்டணி வைக்கும்.. இவர்கள் அனைவருக்கும் பொதுவான சின்னமாக இரட்டை இலை கொடுக்கப்படும் என்று பாஜக அறிவிக்கும்.. போகிற போக்கை பார்த்தால் அப்படித்தான் நடக்கும் போல..

 எல்லா பஸ்களிலும் மகளிருக்கு இலவசம்? எடப்பாடி வைத்த கோரிக்கை! டக்குனு எழுந்த சிவசங்கர்! என்ன சொன்னார் எல்லா பஸ்களிலும் மகளிருக்கு இலவசம்? எடப்பாடி வைத்த கோரிக்கை! டக்குனு எழுந்த சிவசங்கர்! என்ன சொன்னார்

 4 கட்சிகள்

4 கட்சிகள்

ஏனென்றால், தினகரன், சசிகலா, ஓபிஎஸ்ஸைதான், எடப்பாடி சேர்த்து கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டாரே... அதனால், இவர்கள் எல்லாம் ஒவ்வொரு கட்சியாக நின்று, பாஜகவுடன் கூட்டணி வைத்தால், இதற்கு எடப்பாடியால் மறுப்பும் எதிர்ப்பும் சொல்ல முடியாது.. எப்படி கம்யூனிஸ்ட்கள் இடது, வலது என்று இருக்கிறார்களோ, அதுமாதிரி, எடப்பாடி அதிமுக பன்னீர்செல்வம் அதிமுக, சசிகலா அதிமுக, தினகரன் அதிமுக இப்படி பிரிந்து 4 கட்சியாக இணைத்து, பொதுச்சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவித்து, அதற்கு பிறகுதான் இரட்டை இலையை தருவாங்க போல' என்று கிண்டலாக காந்தராஜ் நம்மிடம் கூறியிருந்தார்.

 இலை தலை

இலை தலை

அந்தவகையில், இப்போதுவரை அதிமுக விவகாரமும் தீரவில்லை, "கூட்டணியை முடிவு செய்வேன், எடப்பாடிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கட்டும், இரட்டை இலை சின்னம் முடங்காது,. மாறாக எனக்குதான் சின்னம் கிடைக்கும்" என்று ஓபிஎஸ்ஸும் பரபரப்பை கூட்டியிருந்தார்.. ஒருவேளை, இரட்டை இலை கிடைக்காவிட்டால், அதை எடப்பாடி பழனிசாமி வழக்கமான துணிவுடன் ஏற்றுக்கொண்டாலும், அவருடன் இருக்கும் மற்ற தலைவர்கள் "இலை" இல்லாத அதிமுகவை ஏற்பார்களா? என்பது சந்தேகம்தான்.. எனவே, இரட்டை இலை இல்லாமல், அதிமுகவின் கட்சி அடையாளம் இல்லாமல் அவரால் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள நிச்சயம் தைரியம் வராது என்றும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்..

 பவர் யாருக்கு

பவர் யாருக்கு

அதுமட்டுமல்ல, இலையை யாருக்கு வேண்டுமானாலும் தரக்கூடிய பவர், பாஜகவுக்கு இருக்கவே செய்கிறது, அத்துடன் இலையை முடக்கக்கூடிய வலிமையும் பாஜகவுக்கு இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.. கடந்த 1989-லும், 2017-லும் இரட்டை இலை முடங்கியது.. ஆனாலும் அந்தந்த நேரத்தில் நடந்த தேர்தல்களில் அவ்வளவாக பாதிப்புகள் ஏற்படுத்தவில்லை.. இப்போது அப்படி இல்லை.. இலை யாருக்கோ அவர்களே "தலை" என்று கணிக்கும் நிலைமை வந்துள்ளதால், எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார் என்பதே ரத்தத்தின் ரத்தங்களின் ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பாக உருவாகி உள்ளது..

 முடங்கும் சின்னம்

முடங்கும் சின்னம்

விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இரு தரப்புமே இரட்டை இலைக்கு உரிமை கோரும் போது சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. ஒருவேளை இரட்டை இலை முடக்கப்பட்டால், மேலிட பாஜக பின்னணியில் இருப்பது உறுதியாக தெரிந்துவிடும்.. ஏற்கனவே, பாஜக இல்லாமல் மெகாகூட்டணிக்கு தயாராகி வரும் சூழலில், சின்னம் முடக்கப்பட்டுவிட்டால், அதையே காரணம் காட்டி, கூட்டணியிலிருந்து வெளியேறிவிடலாம் என்றும் சிறுபான்மையினரிடம் உள்ள பாஜக அதிருப்தி ஓட்டுக்களையும் அறுவடை செய்து கொள்ளலாம் என்றும் எடப்பாடி தரப்பு கணக்கு போடும் என்கிறார்கள். அல்லது வேறு வேறு சின்னத்தில் போட்டியிட நேர்ந்தால், மக்கள் செல்வாக்கு இல்லாத ஓபிஎஸ்ஸை எளிதில் தோற்கடிக்கலாம் என்றும் எடப்பாடி தரப்பு கணக்கு போடுகிறதாம்..

 வாசன் அதிரடி

வாசன் அதிரடி

பொதுவாக, இடைத்தேர்தல்கள் என்றாலே ஆளும் கட்சி வெற்றி பெறுவதுதான் இயல்பு.. அந்தவகையில், திமுகவே பிரதான வெற்றி பெறும் என்பதால், ஈரோடு கிழக்கு தொகுதியை தமாகாவுக்கு ஒதுக்கிவிட்டு, எடப்பாடி தரப்பு ஒதுங்கி கொள்ளவும் வாய்ப்புள்ளதாம். எப்படி பார்த்தாலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலானது, எந்த வகையிலும் எடப்பாடியை பாதிக்காது என்றே சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, இன்னொன்றையும் சுட்டிக்காட்டுகிறார் அரசியல் ஆலோசகர்கள்..

 ரெடி யுவராஜா

ரெடி யுவராஜா

தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு, தேர்தல் ஆணையம் பொதுக்குழு முடிவை ஏற்றுக்கொண்டு, தேவையான மாற்றங்களை செய்யாவிட்டால், வேட்பாளர்களுக்காக வழங்கப்பட்ட பி-படிவத்தில் எடப்பாடியின் கையெழுத்து செல்லாது.. இதனால், இந்த இடைத் தேர்தலில், அதிமுக அல்லது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட்டாலும், பட்டியலில் இருந்து பொதுவான சின்னம் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் சொல்கிறார்கள்.. இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், தமாகா போட்டியிடுமா என்ற கேள்விக்கு, அக்கட்சியின் தலைவர் வாசன், இது குறித்து மிக விரைவில் முடிவெடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. யுவராஜாவும் கட்சித் தலைவரின் முடிவிற்கு கட்டுப்படுவேன் என்று கூறியுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு யாருக்கு போக போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

English summary
3 Huge Plus points and what will Edappadi Palanisamy decide about the Erode East by-election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X