மூணுமே தப்புங்க.. பாயிண்ட்டுக்கு வந்த திமுக.. வெட்ட வெளிச்சமாக்கிடுச்சே.. எடப்பாடி பழனிசாமிக்கு செக்?
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை, மர்ம மரணங்கள்- பொள்ளாச்சி பாலியல் வன்முறைகள் - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மூன்றும் நடந்தது அதிமுக ஆட்சியில்தான்.. இதில் முறையாக நடவடிக்கை எடுத்ததாக சட்டப்பேரவையில் தவறான தகவல்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.. இது அவரது நாணயமற்ற தன்மையை காட்டுகிறது என்கிறது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலி.. அத்துடன் கொடநாடு விவகாரத்தில் கடுமையாக எடப்பாடியை விமர்சித்துள்ளது முரசொலி.
"மூன்றுமே தவறான தகவல்கள்" என்ற தலைப்பில் கொடநாடு, பொள்ளாச்சி, தூத்துக்குடி சம்பவங்கள் குறித்து திமுகவின் முரசொலியில் தலையிடப்பட்டுள்ளது.
இதில், கொடநாடு சம்பவம் குறித்து குறிப்பிடும்போது, "ஜெயலலிதா ஊட்டி சென்றால் தங்கும் வீடுதான் கொடநாடு பங்களா. அதுவே அவரது முகாம் அலுவலகமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கொடநாடு: ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அந்த பங்களாவை ஒரு கும்பல் குறி வைத்தது. கடந்த அதிமுக ஆட்சியில் தான் 2017 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அன்று நள்ளிரவில் கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் ஒன்பதாவது எண் நுழைவாயிலில் 11 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைகிறது. ஓம் பகதூர் என்கிற காவலாளியை கட்டி வைத்துவிட்டு எஸ்டேட்டுக்குள் இந்த கும்பல் நுழைகிறது. இறுதியில் அவர் கொலை செய்யப்படுகிறார்.
பங்களாவில் இருந்த பொருட்கள் அனைத்தும் திருடப்படுகிறது. சயான் என்கிற கேரளாவை சேர்ந்தவர்தான் இதனை செய்ததாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் நடந்த ஒரு வாரத்தில் ஏப்ரல் 28ஆம் தேதி இதில் சம்பந்தப்பட்டதாக சொல்லப்படும் கனகராஜ் என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைகிறார். அவர் விபத்தில் மரணம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. ஜெயலலிதாவுக்கு கார் டிரைவராக இருந்த இந்த கனகராஜ் சேலத்தைச் சேர்ந்தவர் சயான் என்பவர் உள்ளிட்ட கூலிப்படையை பணம் கொடுத்து அழைத்து வந்ததாக சொல்லப்படுபவர் தான் இந்த கனகராஜ் .

குற்ற வழக்குகள்: கனகராஜ் மரணம் அடைந்த அதே நாளில் சயான் சென்ற காரும் விபத்திற்கு உள்ளாகிறது .அந்த இடத்திலேயே சயானின் மனைவியும் குழந்தையும் கொல்லப்படுகிறார்கள். காயத்துடன் தப்புகிறார் சயான். குற்ற வழக்குகளில் இது போன்று நிறைய நடக்கும். ஒருவரை வைத்து ஒரு சம்பவம் செய்ய வைப்பார்கள். அதே ஆட்களை உடனே காலி செய்து விடுவார்கள். இதுதான் கொடநாடு சம்பவத்தில் நடந்திருக்கிறது. அடுத்த சில நாட்களில் கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டர் ஆக இருந்த தினேஷ் குமார் என்பவர் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது .
கொடநாடு பங்களாவில் சில சின்ன சின்ன பொருட்கள்தான் காணாமல் போனது என்றும் அவைகளும் கீழே கிடந்து எடுக்கப்பட்டு விட்டன என்று அவற்றை கைப்பற்றி விட்டோம் என்றும் அதிமுக ஆட்சியில் சொன்னார்கள். 2019 ஆம் ஆண்டில் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மாத்தியூ ஒரு அதிர்ச்சியான வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் சயான், வாளையார் மனோஜ் பேட்டியளித்திருந்தார்கள். பழனிசாமிக்கு இவையெல்லாம் தெரியும். அதனால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று கனகராஜ் எங்களிடம் சொன்னதாக சயான் அதில் பேட்டி கொடுத்திருந்தார்.

பழனிசாமி பொறுப்பு: பழனிச்சாமியின் பெயரை கனகராஜ் எங்களிடம் பயன்படுத்தினார் என்று வாக்கு மூலத்தில் சயான், வாளையார் மனோஜ் சொல்லியிருக்கிறார்கள். தங்களுக்கு உதவியாக சஜீவன் என்பவர் பெயரையும் சயான் ,வாளையார் மனோஜ் இருவரும் சொல்லியிருக்கிறார்கள். இந்த சஜீவன் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவுக்கு மர வேலைப்பாடுகள் செய்து கொடுத்ததாக சொல்லப்படுகிறார். அந்த சஜீவனுக்கு அதிமுகவில் வர்த்தக அணி செயலாளர் பொறுப்பை கொடுத்திருந்தார் எடப்பாடி பழனிச்சாமி .
சஜீவனுக்கு கட்சிப் பதவி தரக்கூடாது என்று ஊட்டியில் பல்வேறு இடங்களில் அதிமுகவினரே எம்ஜிஆர் சிலைக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பழனிச்சாமி முதலமைச்சராக நீலகிரிக்கு வந்த போது அரசு விழாவில் அவர் அருகில் சஜீவன் இருந்திருக்கிறார். மூன்று அரசு விழாக்களில் பழனிச்சாமியுடன் சஜீவன் இருந்துள்ளார். இந்த சஜீவன் அவரது தம்பி சுனில் இருவர் பெயரும் நீதிமன்ற வாக்குமூலத்தில் இருக்கிறது.

புலன் விசாரணை: பழனிச்சாமி மீது குற்றம் சாட்டினார்கள் என்பதால் சயானும் மனோஜும் சிறையில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் தான் திமுக ஆட்சிக்கு வந்ததும் மறுபடியும் குற்றவாளிகளையும் சாட்சிகளையும் விசாரிக்க தொடங்கியதும் சட்டமன்றத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தார் பழனிச்சாமி. எந்த வழக்கையும் மேற்கொண்டு புலன் விசாரணையை காவல்துறை நடத்தலாம். மேல் புலன் விசாரணை என்பது குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டத்தின்படி நடத்தப்படுவது.
கொடநாடு வழக்கிலும் மேற்கொண்டு புலன் விசாரணை நடத்தப்படுகிறது. இதனைத் தான் தன்னிடம் அதிகாரம் இருந்த போதும் பழனிச்சாமி செய்தார். உண்மையை வெளியில் கொண்டு வருவோம் என்று முதல்வர் சொல்கிறார் என்றால், அதிமுகவினர் மகிழ்ச்சியடைய தானே வேண்டும். குற்றச்சம்பவம் நடந்தது ஜெயலலிதா தங்கி இருந்த வீடு தானே? விசாரணை செய்தால் ஏன் கோபப்படுகிறார்கள்? அதனால்தான் மர்மங்கள் உடைபட வேண்டும்" என்று தலையங்கத்தில் பதிவாகி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications