Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 பெரிய "நங்கூரம்".. ஆளுநர் அதிகாரத்திலேயே கைவைக்கும் திமுக.. அப்பவே நாள் குறித்த முதல்வர்.. போச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசே துணை வேந்தர்களை நியமனம் செய்யும் வகையில் சட்டசபையில் புதிய மசோதாவை ஆளும் திமுக அரசு இன்று சட்டசபையில் தாக்கல் செய்தது. தமிழ்நாடு அரசின் இந்த மசோதா ஆளுநர் தரப்பிற்கு வைக்கப்படும் மிகப்பெரிய செக்காக பார்க்கப்படுகிறது.

Recommended Video

    ஆளுநரின் ஊட்டி மீட் | தமிழக அரசே பல்கலை. துணை வேந்தர்களை நியமிக்க மசோதா | Oneindia Tamil

    தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவிக்கும் ஆளும் திமுக தரப்பிற்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட 9 முக்கிய மசோதாக்களை ஆளுநர் ரவி இதுவரை ஏற்கவில்லை.

    நீட் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து ஆளுநர் ரவி காலம் தாழ்த்தி வருவது மோதலை பெரிதாக்கி உள்ளது. இதற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் பல மேடைகளில் பேசிவிட்டார். அதேபோல் திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியும் பல்வேறு விமர்சன கட்டுரைகளை எழுதிவிட்டது.

    மோதல் பெரிதானது

    மோதல் பெரிதானது


    இந்த நிலையில்தான் சமீபத்தில் ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறைக்கு வந்த ஆளுநருக்கு எதிராக திமுக தவிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் தீவிர போராட்டங்களை நடத்தி, கருப்பு கோடி காட்டியது. இதையடுத்து மறுநாளே ஆளுநர் ரவி டெல்லிக்கு சென்றார். டெல்லியில் 2 நாட்கள் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டவர் தற்போது தமிழ்நாடு வந்துள்ளார். 7 நாள் பயணமாக ஆளுநர் ரவி தற்போது ஊட்டி சென்றுள்ளார்.

     முதல் நங்கூரம்

    முதல் நங்கூரம்

    இந்த நிலையில்தான் ஆளுநரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் மசோதாவை திமுக கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. முன்னதாக மாநிலங்களையில் பேசிய திமுக எம்.பி. வில்சன் ஆளுநர்களின் அதிகாரத்திற்கு எதிராக மசோதா தாக்கல் செய்தார். அதில், மாநில சட்டமன்றங்களால் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது கவர்னர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவை திருத்த வேண்டும் என்று தனி உறுப்பினர் மசோதாவை தாக்கல் செய்தது.

    இரண்டாவது நங்கூரம்

    இரண்டாவது நங்கூரம்

    அதேபோல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி, மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர திமுக நோட்டீஸ் அனுப்பியது. இது ஏற்கப்படவில்லை என்றாலும் மிக முக்கியமான தீர்மானமாக பார்க்கப்பட்டது. திமுக எம்பி டி ஆர் பாலு மூலம் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் தேசிய அளவில் கவனம் பெற்றது.

    இப்போது 3வது நங்கூரம்

    இப்போது 3வது நங்கூரம்

    இந்த நிலையில்தான் தற்போது மூன்றாவது நங்கூரமாக ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.தமிழ்நாடு அரசே துணை வேந்தர்களை நியமனம் செய்யும் வகையில் சட்டசபையில் புதிய மசோதாவை ஆளும் திமுக அரசு இன்று தாக்கல் செய்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர்தான் வேந்தர். துணை வேந்தர்களை தற்போது ஆளுநர்தான் நியமித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான், துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமனம் செய்யும் முடிவை எடுத்து இருக்கிறது.

    அப்பவே நாள் குறித்துவிட்டார்

    அப்பவே நாள் குறித்துவிட்டார்

    இதற்கான மசோதாவை இன்று தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்ய உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஊட்டியில் நடக்க உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள ஆளுநர் ரவி நீலகிரி சென்றுள்ளார். இன்று அந்த கூட்டம் நடக்க உள்ள நிலையில்தான் தமிழ்நாடு அரசு இந்த மசோதாவை கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் இதை முன்பே அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆளுநர் அலங்காரம்

    ஆளுநர் அலங்காரம்

    தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமனம் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜனவரி 6ம் தேதியே அறிவித்துவிட்டார். இந்த கூட்டத்தொடர் மே 10 வரை நடக்க உள்ளது. இந்த நிலையில் இன்றே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஆளுநர் பதவி என்பது வெறும் அலங்காரம் என்று ஆளும் திமுக சொல்லி வரும் நிலையில்தான் அவரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் திமுக இந்த மூவை செய்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+