"வீட்டை விட்டு போக முடியலையே" முனியம்மாளிடம் கலங்கிய மீன் வியாபாரி.. ஒரே குடும்பத்தில் 3பேர் தற்கொலை
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்
சென்னை: வியாசர்பாடியில் கடன் தொல்லை மற்றும் சொந்த வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலைமை வந்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த தம்பதி கரிகாலன் - முனியம்மாள். கரிகாலன் ஒரு மீன் வியாபாரி.. முனியம்மாளுக்கு 46 வயதாகிறது.. முனியம்மாளின் அண்ணன் ஆறுமுகம்.. இவருக்கு 50 வயதாகிறது.. ஆனால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராம்.

கரிகாலன் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.. மகளுக்கு 5 மாசத்துக்கு முன்புதான் கல்யாணம் முடித்தார்.. இந்த கல்யாணத்துக்காக தன்னுடைய வீட்டை 7 லட்ச ரூபாய் வரை அடமானம் வைத்து கடன் வாங்கினார்.. கல்யாணம் முடிந்ததுமே கரிகாலனுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.
அதனால் வீட்டை விற்று கடனை அடைக்க முடிவு செய்தார்.. ஆனால் இதற்கு கரிகாலனின் மகன் ஹரிஹரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்... வீட்டை விற்கவே கூடாதுஎன்று சொன்னதுடன், சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டும் போய்விட்டார்.
எனினும், கடன்தொல்லை நெருக்கவும், இந்த 10 நாளாக வீட்டை விற்பதும், வாங்கிய கடனை அடைப்பதுமாக கரிகாலன் இருந்துள்ளார்... இறுதியில் தன் வீட்டை விட்டு வெளியேறும் சூழலும் வந்தது.. ஆனால் இவ்வளவு காலம் வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேற முடியாமல் கரிகாலன் தம்பதி தவித்தனர்.. அதனால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.
அதன்படியே தம்பதி இருவரும் அடுத்தடுத்து தூக்கு போட்டு தொங்கிவிட்டனர். தகவலறிந்து சென்ற எம்கேபி போலீசார் வீட்டிற்குள் நுழைந்தபோது, மனவளர்ச்சி குன்றிய ஆறுமுகம் விஷம் அருந்தி ஹாலில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ந்தனர். 3 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications