3% இடஒதுக்கீடு ரெடி.. அசால்ட்டா அரசு வேலை கிடைக்கும்.. ஸ்டாலின் சொன்ன நல்ல செய்தி.. என்னனு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: 3% இடஒதுக்கீடு விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகள்/பொதுத் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த இடஒதுக்கீட்டின் கீழ் யாருக்கெல்லாம் வேலை கிடைக்கும் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள் / திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள் / பொதுத்துறை நிறுவனங்களில் (PSUs) 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுவருகிறது. இத்திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கு கீழ்காணும் விளையாட்டுப்போட்டிகளில் 01.01.2018 அன்றோ அல்லது அதன் பிறகு பெற்ற சாதனைகள் தகுதியானவையாக கருதப்படும்.

3 Percent reservation in Tamil Nadu Government Jobs says CM Stalin: Who can get?
  • சர்வதேச போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் / பங்கேற்றவர்கள்)
  • கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுபோட்டிகள்
  • ஆசிய விளையாட்டுப்போட்டிகள்
  • சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (IOC) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் (ISF) 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள்
  • 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை, IOC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF இன் கீழ் போட்டிகள்
  • நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது IOC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF இன் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள்
  • தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள்
  • பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
  • ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு
  • சங்கம் (IBSA) காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள். விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர்
  • தேசிய அளவிலான போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் மட்டும் )
  • தேசிய விளையாட்டுப்போட்டிகள்,
  • அமைச்சகத்தால்
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப்போட்டிகள்\\
  • மாநில அளவிலான சாம்பியன்ஷிப்போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் மட்டும் )

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் (SDAT) அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருதப்படும்.

( கோவையே நிமிர்ந்து நிற்குதே.. எடப்பாடி மிஸ் பண்ணதை கையில் எடுத்த ஸ்டாலின்.. ஏக குஷியில் மக்கள் )

வயது வரம்பு: விளையாட்டு வீரர்கள் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து குறைந்தபட்ச கல்வித் தகுதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

தமிழ்நாட்டினை சார்ந்த விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் மேற்காணும் வழிகாட்டுதலின்படி 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் Www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தகுதியான விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் விண்ணப்பத்தினை இணையதள முகவரியில் உரிய இணைப்புகளுடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் அல்லது விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய இணைப்புகளுடன் 31.10.2023-ம் தேதி மாலை 5.00 மணிக்குள் மேற்காணும் இணையதள முகவரி அல்லது நேரு விளையாட்டரங்கில் இயங்கிவரும் தலைமை அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பித்திடுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+