அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடு.. 3 பேராசிரியர்கள் நீலகிரிக்கு அதிரடி டிரான்ஸ்பர்
சென்னை: தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடு காட்டிய 3 பேராசிரியர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி கல்வி இயக்கம் தகவல் தெரிவித்துள்ளது. மாணவர்களிடையே சாதி பாகுபாடு காட்டி மோதல்களை உருவாக்கும் வகையில் செயல்பட்டதாக 3 பேராசிரியர்கள் மீது புகார் தெரிவிக்கிப்பட்டுள்ளது.
சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் பாடினாலும் மாணவர்களிடையேயும், பள்ளி, கல்லூரிகள், பணியிடங்களில் ஜாதி பாகுபாடு இருந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த மாதம் நாங்குநேரியில் பள்ளி மாணவனையும், அவனது தங்கையையும் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய வழக்கில் பள்ளி மாணவர்கள் 6 பேரை கைது செய்தனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் சாதி ரீதியான பிரச்சினைகள் மாணவர்களிடையே தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இது போன்ற சம்பவம் தன்னை வேதனைக்குள்ளாக்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

இதனிடையே கல்லூரி போராசிரியர்கள் மாணவர்களிடையே சாதி பாகுபாடு காட்டுவதாக புகார் எழுந்தது. சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் சாதி பாகுபாடு நிலவுவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தினர். அந்த கல்லூரியில் பேராசிரியர் கிருஷ்ணன் சாதிபாகுபாடு பார்ப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய குழுவினர், சில பேராசிரியர்கள் சாதி பாகுபாடு பார்ப்பதாக கூறினர். இதையடுத்து, கல்லூரி முதல்வர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி பேராசிரியர் கிருஷ்ணன், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் உண்மைத்தன்மை குறித்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், கோட்டாட்சியர் ஆகியோர் கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அதிகாரிகளின் விசாரணையை அடுத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், சாதி பிரிவினை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக 3 பேராசிரியர்களை, பணியிட மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வியாசர்பாடி கல்லூரி பேராசிரியர் ரவி மயிசின், சிவகங்கை கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணன், கும்பகோணம் கல்லூரி பேராசிரியர் சரவணபெருமாள் ஆகியோர் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications