சென்னையில் அதிகாலையில் ஷாக்.. பலத்த சத்தத்துடன் திடீரென இடிந்து விழுந்த கடைகள்.. மக்கள் அதிர்ச்சி
சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், நேற்று அதிகாலை சிந்தாதிரிப்பேட்டையில் மழைநீர் வடிகால் பணிக்கு பள்ளம் தோண்டியபோது அருகில் இருந்த 3 கடைகள் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையின் பல்வேறு சாலைகளில் வாகனம் ஓட்டி செல்வோருக்கு இரண்டு விஷயம் நன்றாக தெரியும். ஒன்று சாலைகளில் மெட்ரோ ரயிலுக்காக பள்ளம் தோண்டி, ஒரு பாதை சாலையை அடைத்து வைத்திருப்பார்கள். இல்லாவிட்டால் சாலையில் மழைநீர் வடிகாலுக்காக தோண்டிருப்பார்கள்.

இதுதான் இன்றைய எதார்த்தம். அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது.காலையில் அலுவலகம் செல்வோரும், மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோரும் நொந்து போய்விடுவார்கள்.
இப்படியான சூழலில் மழைநீர் வடிகால் பணியின் போது கடைகள் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனால் சாலையில் 10 மணி நேரம் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என்கிற முனைப்பில் சென்னை மாநகராட்சி, பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை செய்து வருகிறது. இதனால், இரவு, பகல் பார்க்காமல் ஊரியர்கள் வேலை செய்து வருகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி மழைநீர் வடிகால் நடைபெறும் பகுதிகளை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
சனிக்கிழமை இரவு சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஞாயிறு அதிகாலை 3.30 மணியளவில் அருணாச்சலம் சாலையில் பொக்லைன் எந்திரம் மூலம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக சாலையின் ஓரத்தில் பள்ளம் தோண்டினார்கள். அப்போது அருகில் இருந்த 3 கடைகளின் முன்புற பகுதிகள் பலத்த சத்தத்துடன் திடீரென இடிந்து விழுந்தன. இதனால் பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்கள். உடனடியாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார்கள். இதையடுத்து சிந்தாதிரிப்பேட்டை போலீசாரும் விரைந்து வந்து அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்தனர். இதேபோல, இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபடுத்தினார்கள்.
அதிகாலையில் நடைபெற்ற இச்சம்பவத்தால் பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்தனர்.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications