Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் ‘மாஸ்’ பிளான்.. ஒரே மேடையில் 3 மாநில முதல்வர்கள்.. அவரும் வர்றாராமே!

பாஜக அரசுக்கு எதிராக மாஸ் பிளான் ஒன்றை வகுத்திருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

Subscribe to Oneindia Tamil

சென்னை : 3 மாநில முதலமைச்சர்களை ஒரே மேடையில் நிறுத்தி, பாஜக அரசுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மாநாட்டை நடத்த சிபிஐஎம் தமிழ்நாடு மாநிலக்குழு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான தீர்மானம் நேற்று மாநிலக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சிபிஐஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோரை அழைத்து மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சிபிஐஎம் மாநிலக் குழு

சிபிஐஎம் மாநிலக் குழு

சிபிஐஎம் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் பொன்னேரியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதோடு, மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து, பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம், ஏப்ரல் மாதம் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

3 மாநில முதல்வர்களை அழைக்க முடிவு

3 மாநில முதல்வர்களை அழைக்க முடிவு

இந்தக் கூட்டத்தில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள நரேந்திர மோடி தலைமயிலான பாஜக அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு குழிபறிக்கும் வகையில் மாநில உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிறது என்றும் இதை கண்டித்தும், மாநில உரிமைகளை வலியுறுத்தியும் மாபெரும் 'மாநில உரிமைகள் பாதுகாப்பு' மாநாட்டை சென்னையில் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டிற்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோரை அழைப்பது என்றும் சிபிஐ(எம்) மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.

ஆளுநருக்கு எதிராக

ஆளுநருக்கு எதிராக

மேலும், பாஜக அரசு மாநில உரிமைகளின் மீது கொடூரமான தாக்குதலை தொடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வித்துறை மீதான மாநிலங்களின் உரிமைகளை முற்றாக பறிக்கிறது. தமிழ்நாடு, கேரளா உட்பட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளின் செயல்பாட்டை சீர்குலைத்து வருகிறது. உதாரணமாக, தமிழ்நாடு சட்டப்பேரவையால் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா, நீட் தேர்வு விலக்கு மசோதா உள்ளிட்ட 27 மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் அடம்பிடித்து வருகிறார்.

ஆர்.எஸ்.எஸ் ஏஜெண்ட்

ஆர்.எஸ்.எஸ் ஏஜெண்ட்

மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் அரசியல் சட்ட கடமையை நிறைவேற்றுவதை விட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முகவர்கள் போலவே செயல்படுகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில அரசினால் தயாரிக்கப்பட்ட உரையின் சில பகுதிகளை தமிழ்நாடு ஆளுநர் படிக்க மறுத்தது அப்பட்டமான அத்துமீறல். மொழிவழி மாநிலங்கள் என்பதையே ஏற்காத பாஜக பரிவாரம், மாநிலங்கள் என்ற கட்டமைப்பையே சிதைக்க முயல்கிறது. மாநிலங்களின் உரிமைகளை பறித்து ஒன்றியத்தின் அதிகார குவிப்பை நிகழ்த்தி வருகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அவுட்சோர்சிங்

அவுட்சோர்சிங்

மேலும், மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களின் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்தம் மற்றும் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். திருவள்ளூர் ராஜாநகரம் கிராமத்தில் 27 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய மனைகளில் குடியேற முடியாத நிலையில் உள்ள பட்டியலின மக்களுக்கு, சம்பந்தப்பட்ட இடத்தில் தொகுப்பு வீடுகளை அரசே கட்டிக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+