Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிலிண்டருக்கு குட் பை? தமிழ்நாட்டில் வீட்டில் இனி பைப்பை திறந்தால் கேஸ் வரும்.. மக்கள் ஆர்வம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடுகளுக்கு குழாய் வழித் தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் திட்டத்திற்கு சென்னையில் மட்டும் 6000 பேரும், தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேரும் பதிவு செய்துள்ளதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை சமையல் எரிவாயு கேஸ் விநியோகம் வீடுகளுக்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வினியோகிக்கும் 14.20 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மூலமாக நடக்கிறது.

30 000 people in Tamil Nadu have registered for pipeline natural gas supply to households

ஆனால் குஜராத், கர்நாடகாபோன்ற சில மாநிலங்களில் உள்ள பகுதிகளில் வீடுகளுக்கு குழாய் வழித் தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. இது எல்பிஜி சமையல் எரிவாயு உடன் ஒப்பிடும் போது செலவு 20 சதவீதம் குறைவு ஆகும். சுற்றுச்சூழலையும் பெரிதாக பாதிக்காது. இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த பொதுத்துறை நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்தியாவில்இந்த திட்டம் பெரிய அளவில் இல்லை என்கிற போதிலும், அமெரிக்கா, ரஷ்யா போன்ற மேற்கத்திய நாடுகளிலும், ஐரோப்பாவிலும் 'பைப் லைன்' எனப்படும், குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல், நிலக்கரி, எல்.பி.ஜி., எரிவாயு ஆகியவற்றுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு கேஸ் அங்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த இயற்கை எரிவாயு சுற்றுச்சூழலை பாதிக்காது என்பதுடன் மற்ற எரிபொருளுடன் ஒப்பிடும் போது செலவும் குறைவு என்பதால் வளர்ந்த நாடுகள் இந்த திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன.

உலக அளவில் இயற்கை எரிவாயு பயன்பாடு 25 சதவீதமாக உள்ள நிலையில், இந்தியாவில் வெறும் 6 சதவீதமாகவே உள்ளதாக கூறப்படுகிறத. வரும் 2030க்குள் இயற்கை எரிவாயு பயன்பாட்டைஅதிகரிக்க, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. பொதுவாக கச்சா எண்ணெயில் இருந்துதான் எல்.பி.ஜி. எனப்படும் சமையல் கேஸ் தயாரிக்கப்பட்டு சிலிண்டர் உருளைகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இது, 100 சதவீதம் இறக்குமதியை சார்ந்திருக்கிறது. ஆனால் இயற்கை எரிவாயு 50 சதவீதம் உள்நாட்டில் கிடைக்கிறது; மீதி 50 சதவீதம் தான் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை வரும் என்கிறார்கள்

தமிழகத்தில் எண்ணுார், கேரளாவில் கொச்சி உட்பட பல இடங்களில், திரவ நிலை எரிவாயு முனையம் அமைக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில், இந்த முனையங்களுக்கு திரவ நிலையில் இயற்கை எரிவாயு எடுத்து வரப்படுகிறது.
அந்த எரிவாயு, இயற்கை எரிவாயுவாக மாற்றப்படுகிறது. அதை, குழாய் வழித்தடத்தில் வினியோகம் செய்ய, 'சிட்டிகாஸ் டிஸ்ட்ரிபியூஷன்' என்ற வினியோக நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது-

அந்நிறுவனங்கள், குழாய் வழித்தடத்தில் வீடுகள், தொழிற்சாலைகளுக்கு இயற்கை எரிவாயுவாகவும்; சி.என்.ஜி., மையங்கள் வாயிலாக வாகனங்களுக்கும், சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவாகவும் வினியோகம் செய்கின்றன. தமிழகத்தில் இயற்கை எரிவாயுவை வினியோகிக்க, 'டோரன்ட் காஸ், அதானி, ஏஜி அண்டு பி' உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

வரும் 2030க்குள், 2.30 கோடி வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ள மத்திய அரசு அதற்காக உள்ளாட்சி அமைப்புகள், குழாய் வழித்தடம் அமைக்க விரைந்து அனுமதி வழங்க முயற்சித்து வருகிறது.

தமிழகத்தில் குழாய் வழித் தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் எல்என்ஜி எனப்படும் திரவ நிலை இயற்கை எரிவாயு முனையம் அமைக்கப்பட்டிருக்கிறது..

இதற்கு வெளிநாடுகளில் இருந்து கப்பலில் எரிவாயு கொண்டு வரப்படுகிறது. இந்த எரிவாயு, வாகனங்களுக்கு சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவாகவும், வீடுகளுக்கு பிஎன்ஜி எனப்படும் குழாய் வழித் தடம் மூலமாகவும் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் வரும் 2030-க்குள் 2.30 கோடி வீடுகளுக்கும், 2,785 சிஎன்ஜி மையங்கள் மூலமாக வாகனங்களுக்கும் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட 7 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. சென்னையில் டோரண்ட் என்ற நிறுவனம் அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 500 வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்து வருகிறது.

30 000 people in Tamil Nadu have registered for pipeline natural gas supply to households

மேலும் 6 ஆயிரம் வீடுகள் குழாய் எரிவாயு இணைப்பு பெற பதிவு செய்திருக்கின்றன. தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் வீடுகள் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு பெற எரிவாயு விநியோக நிறுவனங்களிடம் பதிவு செய்திருக்கின்றன. இவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு பல்வேறு கட்டண சலுகைகளையும் வழங்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+