"அது" மட்டும் சீக்ரெட்.. அந்த "30 மணி நேரம்".. ஓபிஎஸ், சசிகலாவின் கானல் நீர்.. குபீர் குபேந்திரன்
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து பத்திரிகையாளர் குபேந்திரன ஒன் இந்தியாவுக்கு பேட்டி தந்துள்ளார்
சென்னை: 30 மணி நேரம் ஜெயலலிதா இறந்த விஷயத்தை ஏன் மறைத்தனர்? என்ன நடந்திருக்கும் என்று யூகமான தகவல் ஒன்றை பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
சசிகலா, சசிகலாவின் உறவினரான டாக்டர் கே.எஸ். சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இவர்கள் 4 பேருக்கு மட்டும் ஏன் தொடர்பு? ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி போன்றோர் பெயர் அறிக்கையில் இல்லையே? 30 மணி நேரம் ஜெயலலிதா மரண செய்தி மறைக்கப்பட்டதா? என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்..

ஸ்பெஷல்ஸ்
நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டியை குபேந்திரன் அளித்துள்ளார். அதில் அவர் சொன்னதாவது: "போயஸ் கார்டன் வீட்டில் இருக்கும் கேமராவில் இருந்து, அப்பல்லோ ஆஸ்பத்திரி கேமராக்கள் வரை அத்தனையையும் அகற்றி உள்ளனர்.. உளவுத்துறை ஐஜியாக இருந்த சத்தியமூர்த்தியின் உத்தரவில் பேரில்தான் கேமரா அகற்றப்பட்டதே தவிர, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கேமரா அகற்றப்படவில்லை..

ஆணையம்
30 மணி நேரம் இறந்த நேரம் மறைக்கப்பட்டதாக ஆணையம் சொல்கிறது.. இந்த 30 மணி நேரம் எதற்காக என்றால், இவர்களின் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே.. 30 நேரம் எதற்காக என்றால், யார் அடுத்த முதல்வராவது? யாரை அமைச்சராக்குவது? இப்படி உள்ளடி வேலை அங்கே நிறைய நடந்திருக்கும்.. நடக்காமல் வாய்ப்பே இல்லை.. ஏன் என்றால், அறிக்கையில் உள்ளபடி, என்பார்மிங் செய்யப்பட்ட நேரத்தை வைத்து, சுதா சேஷையன் செய்த பதிவுதான் அது..

30
24 மணி நேரத்துக்கு முன்பு ஜெயலலிதா இறந்துவிட்டார் என்ற தகவல் எப்படி கிடைக்கிறது? 4ம் தேதி பிற்பகலேயே ஜெயலலிதா இறந்துவிட்டார்.. உண்மை அதுதான்.. அந்த நேரத்தில் மாற்றுக்கருத்து கிடையாது.. 2016, டிசம்பர் 4ம் தேதி பிற்பகல், அப்போலோ மருத்துவமனையில் சென்று விசாரித்தால் தெரியும், அன்றைய தினம் முழுமையாக ஆஸ்பத்திரியில் வெளியேற்றம் நடந்தது.. நடக்க கூடாதது நடந்துவிட்டது என்று எல்லாருக்குமே தெரிந்துவிட்டது.. ஆனால் மறுநாள் சாயங்காலம் 4.30 மரணம் என்று அறிவித்தது இவர்களின் அரசியலுக்காகத்தான்..

கானல் நீர்
சசிகலாவுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய சிக்கல் இருக்கு.. ஒருவேளை ஜெயலலிதாவை வெளிநாட்டுக்குஅழைத்து சென்றிருந்தால், பிழைக்க வாய்ப்பு இருந்திருக்கும், அதை தடுத்து விட்டாரே என்ற கோபம் சசிகலா மீது மக்களுக்கு நிச்சயம் எழும்.. அரசியல் பயணம் என்பது இனி அவருக்கு கானல் நீர்.. நடப்பது எல்லாம் தெரிந்து கொண்டு, தன்னுடைய முதல்வர் பதவிக்கு மட்டுமே ஓபிஎஸ் காத்து கொண்டிருந்தார் ஓபிஎஸ்.. இது அவருக்கு நெகட்டிவ் விஷயம்தான்.. அனைத்தையும் தெரிந்து கொண்டு, எடப்பாடி உட்பட அமைச்சர்கள் அமைதி காத்ததால், அனைவருக்குமே சிக்கல்தர்ன.. ஆகமொத்தம், இவர்களால் ஒட்டுமொத்த அதிமுகவுக்கும் அசிங்கம்.." என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications