"டபுள் ஷாக்".. படாரென ஓபிஎஸ் எடுத்த முடிவு.. "அவரும்" இங்கே வர்றாராமே.. திணறும் எடப்பாடி டீம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டபுள் ரூட்டை பிடித்துள்ளார் ஓபிஎஸ்
சென்னை: டபுள் பிளானை ஒரே நேரத்தில் கையில் எடுத்துள்ளார் ஓபிஎஸ்.. இந்த இரு வழி பயணத்திட்டமானது, எடப்பாடி கூடாரத்துக்கு கலக்கத்தை தந்து வருகிறது.
அதிமுகவில் விவகாரம் முற்றி உள்ளது.. இருவரில் யார் இறங்கி வருவார்கள், இணங்கி போவார்கள் என்று தெரியவில்லை.. இதனால் இரு தரப்பிலுமே பரபரப்புகள் தொடர்ந்து வருகின்றன.
அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை நடத்தலாம் என்று எடப்பாடிக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார்.. ஆனால், ஒற்றைத் தலைமை என்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்ஸின் அழைப்பை நிராகரித்துவிட்டார்.

பிடிவாதம்
இதனிடையே, 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும் ,இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டி உள்ளதால், பொதுக்குழுவை கூட்ட ஓபிஎஸ் முதலில் முடிவு எடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ஒத்து வராததால் வேறு வழியின்றி பொதுக்குழுவை கூட்ட முடிவெடுத்து இருக்கிறார் ஓபிஎஸ்... கடந்த 4 நாட்களுக்கு முன்னேயே, நடக்க போகும் பொதுக் குழுவிற்கு எடப்பாடிக்கும் அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டதாம்.. இதற்காக, ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கமே எடப்பாடியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

போனே எடுக்கல
ஆனால், வழக்கமான தன் பிடிவாதத்தில் இருந்து எடப்பாடி மாறவில்லையாம். அதனால், எடப்பாடி ஆதரவாளர்கள் எஸ்பி வேலுமணி , தங்கமணி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் வைத்திலிங்கம்.. அப்போதும் அவர்கள் இணங்கவில்லை என்றே தெரிகிறது.. பிறகு ஓபிஎஸ் மகன் நேரடியாகவே எடப்பாடிக்கு 3 முறை போன் போட்டும் எடப்பாடி போன் எடுக்கவில்லை என்றார்கள்.. இதற்கு பிறகுதான், எடப்பாடியே இல்லாமல் போனாலும், பொதுக்குழுவை நடத்திவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

டபுள் ரூட்
அதாவது, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தலைமையில், இந்த பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கும்படி, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு, ஓபிஎஸ் தரப்பினர் அழைப்பிதழ் அனுப்பவும் முடிவு செய்துள்ளனராம்.. இதற்கிடையே, சசிகலா, டிடிவி தினகரனை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க ஓபிஎஸ் திட்டமிட்டு வருவதாக ஜேசிடி பிரபாகரன் சொல்லியுள்ள கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.. காரணம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்தால் கட்சி பலமாக இருக்கும் என்று ஓபிஎஸ் நம்புகிறாராம்..

பிளான் A
அநேகமாக இருவரும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கிய இடத்தில் நடைபெறலாம் என்கிறார்கள். இதனிடையே, எடப்பாடி பழனிசாமிக்கு, ஓபிஎஸ் வெளிப்படையாகவே சவால் விடுத்துள்ளது, ரத்தத்தின் ரத்தங்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. "அதிமுக தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமியின் அப்பன் வீட்டு சொத்தா? என் வீட்டில் நான் திருடுவேனா? தலைமை கழகம் என்னுடைய வீடு, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த போது 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்வோம் என அறிவுறுத்தினேன்.

பிளான் B
ராஜினாமா செய்து விட்டு தொகுதியில் கட்சி வேலை பார்க்க வலியுறுத்தினேன்... கீழே போய் தொண்டர்களை சந்திக்க போகிறேன், நானா, எடப்பாடி பழனிசாமியா என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்.. என்னை போய் பதவி ஆசை உள்ளவன் என்று சொல்லிவிட்டார்களே.. இதற்கு தொண்டர்களே முடிவு செய்யட்டும்" என்று கூறியுள்ளார். ஒருபக்கம் பொதுக்குழு மறுபக்கம் மக்கள் மன்றம் என இரண்டு ரூட்களில் அடுத்த பயணத்தை தொடங்கி உள்ளார் ஓபிஎஸ்..!

திருமங்கலம்
இதனிடையே, மதுரை முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன், திருமங்கலம் சட்டமன்ற தொகுதி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மாணவர் அணி ஒன்றிய செயலாளர் சிவா, மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, திருப்பரங்குன்றம் வடபழஞ்சி குபேந்திரன், திருமங்கலம் நகர பொறுப்பாளர் ராஜாமணி, கள்ளிக்குடி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் இருந்து முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் தலைமையில், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.. இவர்களை இந்த பக்கம் இழுத்ததில் பெரும்பங்கு, ஓபிஎஸ் மகன்களுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.. இந்த லிஸ்ட் இனியும் தொடரும் என்றும் உறுதியான தகவல்கள் கூறுகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications