எல்லாம் லாக் டவுன்ல நடந்தது..3 வருஷத்தில் 30,000 சிறுமிகள் கர்ப்பம்! அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்.!
சென்னை: தமிழகத்தில் கொரோனா காலம் தொடங்கி அதாவது 2020 முதல் 2022 வரை மூன்று ஆண்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் கர்ப்பம் அடைந்து இருப்பதும், இவற்றில் பெரும்பாலும் போக்சோ வழக்குகளாக பதிவாகவில்லை என அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.
2020 காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு திருமணங்கள் எளிமையாகவும் சில இடங்களில் ரகசியமாகவும் நடைபெற்றன. கிராமப்புறங்களில் இளம் வயது திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்றதாக அப்போதே புகார் எழுந்தது.

குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின்படி 18 வயதுக்கு குறைவான பெண்கள் மற்றும் 21 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் திருமணம் செய்வது சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
லாக் டவுன் திருமணம்: ஆனால் கொரோனா காலகட்டத்தில் லாக் டவுன் பயன்படுத்தி படங்கள் நடைபெற்ற குறிப்பாக குழந்தை திருமணங்கள் அதிகரித்தது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி 2020 முதல் 2022 வரையான காலகட்டங்களில் மூன்று ஆண்டுகளில் சுமார் 30,000 சிறுமிகள் கர்ப்பம் அடைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இது வட மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ அல்ல, கல்வியிலும் அறிவிலும் முன்னணியில் இருக்கும் தமிழ்நாட்டில் தான் என்பது அதிர்ச்சி தரும் விஷயம்.
30,000 சிறுமிகள்: இதுதொடர்பாக பேசியுள்ள சமூக செயல்பாட்டாளர்கள்," பெண்களுக்கு குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகிறது.. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைகளும் இதையே உறுதிப்படுத்துகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 30 ஆயிரம் சிறுமிகள் கருத்தரித்து இருப்பது தெரிய வந்திருக்கிறது. இது ஒரு வருத்தத்திற்குரிய செய்தி. தமிழ்நாட்டில் கொரோனா காலம் தொடங்கி தற்போது வரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் கர்ப்பம் தரித்திருக்கிறார்கள் என்பது பெரிய அதிர்ச்சியை தருகிறது.
போக்சோ வழக்குகள்: தமிழகத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் அதிக அளவு வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது என்பதை ஒருபுறம் சாதகமாக பார்த்தாலும், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் கர்ப்பம் அடைந்திருக்கிறார்கள் என்பது ஆபத்தான விஷயம். இளம் வயது கர்ப்பத்திற்கு காரணம் என்ன என பார்க்கும் போது காதல் விவகாரங்கள் இளம் வயது திருமணம் அல்லது இளம் வயதில் உடலுறவு, அல்லது பாலியல் வன்கொடுமை போன்ற காரணங்களால் இது நிகழ்ந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையும் சமூக நலத்துறையும் சுகாதாரத் துறையும் தான்.
சுகாதாரத்துறை: ஆனால் போக்சோ சட்டத்தின் கீழ் போக்சோ குற்றத்தை மறைப்பதும் குற்றம்தான். இளம் வயதில் ஒரு சிறுமி கர்ப்பம் அடைகிறார் என்றால் அது திருமணமாகவோ அல்லது பாலியல் அத்துமிறலாகவோ தான் இருக்க வேண்டும். ஆனால் போக்சோ சட்டத்தின் படி இது குற்றம்தான். பிரசவத்திற்காக ஒரு சிறுமி மருத்துவத்திற்கு வருகிறார் என்றால் அதனை நிச்சயம் மருத்துவர் பதிவு செய்திருக்க வேண்டும். சிறுமி கர்ப்பம் அடைந்திருக்கிறார் என்றால் அது நிச்சயம் போக்சோ குற்றம் தான் அதனை மருத்துவர் காவல்துறையில் கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும்.
பாதுகாப்பில்லை: 2021 காலத்தில் இளம் வயது திருமணங்கள் அதிகரிக்கும் நிலையில் வீட்டிலேயே இளம் வயது சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லை என்பதுதான் இதில் கவனிக்க வேண்டியது. முப்பதாயிரம் இளம் வயது கர்ப்பங்கள் இருக்கும் நிலையில் 13000 போக்சோ வழக்குகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. எனவே இதில் மிகப்பெரிய பிரச்சனை உள்ளது. 17,000 வழக்குகள் குழந்தை திருமணங்கள் அல்லது பாலியல் பலாத்கார சம்பவங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரத் துறையினருக்கு போஸ்கோ வழக்கு குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதையே காட்டுகிறது. மருத்துவ பணியாளர்களுக்கு உரிய பயிற்சி மற்றும் சட்ட விழிப்புணர்வு இல்லாததால் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications