புளூ கலர் நாக்கு.. சூட்கேஸை திறந்தால் வெள்ளை மலைப்பாம்புகள், 31 தாய்லாந்து உயிர்களால் திகைத்த சென்னை
சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையமே பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தபோதுதான், தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காங்கிலிருந்து அந்த தாய் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கியது. அந்த ஃபிளைட்டில் வந்திறங்கியவர்கள சாதாரணப் பயணிகளை போலவே தெரிந்தனர்.. ஆனால் ஒருவர் மீது மட்டும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது.. அதற்கு பிறகு நடந்த சம்பவத்தால் சென்னை ஏர்போர்ட்டே பரபரத்து போய்விட்டது.
சென்னை விமான நிலையத்திற்கு பாங்காங்கில் இரந்து தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம் நேற்று வருகை தந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து சோதனையிட்டனர்.

சென்னை ஏர்போர்ட்
அப்போது சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றுவிட்டுத் திரும்பியிருந்தார். அவர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்கு பின் முரணாகப் பதிலளித்தார். அவரது பாடி லேங்குவேஜ் வித்தியாசமாக இருந்ததால், சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரது உடைமைகளை முழுமையாக பரிசோதனை செய்தனர்.
அவரது சூட்கேஸை திறந்ததுமே, மொத்த அதிகாரிகளும் ஆடிப்போய்விட்டார்கள்.. காரணம், ஆப்பிரிக்காவின் வறண்ட பாலைவனங்களில் மட்டுமே தென்படும் அழியும் நிலையில் உள்ள 9 சல்கட்டா ஆமைகள் பெட்டிக்குள் அசையாமல் கிடந்தன.. அதேபோல அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளின் ஆழமான காட்டுப் பகுதிகளில் மட்டுமே வாழக்கூடிய 4 அபூர்வ பல்லிகளும், ஆஸ்திரேலியாவின் விசித்திரமான "ஈஸ்டன் வாட்டர் டிராகன்" ஒன்றும் அந்த சூட்கேஸில் நெளிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்..
சூட்கேஸுக்குள் வெள்ளை மலைப்பாம்பு
ஆனால் அதிகாரிகளின் அதிர்ச்சி அத்துடன் முடியவில்லை.. அந்தப் பெட்டியின் ஆழத்தில் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது... அதாவது மலைப்பாம்பு படுத்திருந்ததாம்..
12 ராயல் பைத்தான் மலைப்பாம்புகள் பந்து போல சுருண்டு கிடந்தன. இந்த பாம்புகள் ஆப்பிரிக்காவை சேர்ந்தவை.. ஆனால் விஷமற்றவை.. இந்த பாம்புகளின் கண்கள் கருப்பு, சிவப்பு நிறத்தில் மிரட்டலாக இருக்குமாம்.. இவைகள் தவிர, 'அல்பைனோ கார்ன்' பாம்பு மற்றும் ஆஸ்திரேலியாவின் 3 உடும்புகளும் கண்டெடுக்கப்பட்டன. இந்த விசித்திர உடும்புகள் நீல நிற நாக்கு கொண்டவை..
ஆனால் அதிகாரிகளின் அதிர்ச்சி இத்துடன் முடியவில்லை.. சூட்கேஸின் அடியில் வெள்ளை கலர் பாம்பு நெளிந்து கிடந்ததாம்.. இதற்கு "ஒயிட்சைட் கிங் ஸ்னேக்" என்று பெயர்.. இப்படி சூட்கேஸில் மொத்தம் 31 அபூர்வமான உயிரினங்களை அந்த இளைஞர் வைத்திருந்தது அதிகாரிகளை மேலும் திடுக்கிடச் செய்தது. இவைகள் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டிருந்த நிலையில், அந்த இளைஞரை அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர்..
புளூ கலர் நாக்கு - பாம்புகள்
அப்போது இளைஞன் அதிகாரிகளிடம் தந்த வாக்குமூலத்தில், "வெறும் பணத்திற்காக இந்த செயலை செய்யவில்லை.. பெரும் பணக்காரர்கள் தங்களின் சொகுசு பங்களாக்களில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்காக பல லட்சம் ரூபாய் கொடுத்து இந்த அபூர்வ உயிரினங்களை வாங்கி வரசொன்னார்கள்.. இதில் நான் மட்டுமே சம்பந்தப்படவில்லை.. இது ஒரு பெரும் கடத்தல் சங்கிலி என்றார்..
இதையடுத்து அதிகாரிகள், உயிருடன் மீட்கப்பட்ட அந்த அபூர்வ உயிரினங்களை, வந்த இடத்திற்கே திருப்பி அனுப்ப முடிவு செய்தனர்.. அதற்கான முழுச் செலவும் பிடிபட்ட நபரிடமே வசூலிக்கப்பட்டது. நள்ளிரவில் தாய்லாந்து புறப்பட்ட அதே தாய் ஏர்வேஸ் விமானத்தில் அந்த 31 உயிரினங்களும் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பப்பட்டன.
31 தாய்லாந்து உயிர்
இப்போது சுங்கச் சட்டம் மற்றும் வன பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அந்த இளைஞர் ஜெயிலில் உள்ளார்.. ஆனால், அவரை இயக்கிய நிழல் உலக கடத்தல் கும்பல் யார்? வீட்டில் வளர்க்க கேட்ட செல்வந்தர்கள் யார்? என்பது குறித்த விசாரணை ரகசியமாக ஆரம்பமாகி உள்ளது..
சர்வதேச விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய அளவில் உயிரினங்கள் பிடிபட்டது சென்னைவாசிகளை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது....!!!
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு! ஒரே நாளில் தீர்வு.. சென்னைக்கு குஷி -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications