கூண்டோடு மாற்றப்பட்ட 33 ஐபிஎஸ் அதிகாரிகள்.. 4 மாவட்ட எஸ்பிக்கள் டிரான்ஸ்பர்.. அடுத்தடுத்து அதிரடி!
சென்னை: தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம், திருச்சி, மயிலாடுதுறை, சிவகங்கை மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று 27 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார். எஸ்.பி ரேங்கில் உள்ள அதிகாரிகள் உட்பட தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி. ஸ்ரீநாதா, டிஜிபி அலுவலக உதவி ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சட்டம் ஒழுங்கு ஏ.ஐ.ஜி உமா, சென்னை காவல்துறை தலைமையக ஏ.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி அங்கித் ஜெயின், தி.நகர், டெபுடி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தி.நகர் துணை ஆணையராக இருந்த அருண் கபிலன், சேலம் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட எஸ்.பி சிவக்குமார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை தெற்கு மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி வருண் குமார், திருச்சி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அடையாறு துணை ஆணையர் மகேந்திரன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக மகேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி எஸ்.பி சுஜித் குமார், மதுரை தென் மண்டல அமலாக்கப்பிரிவு எஸ் பியாக மாற்றப்பட்டுள்ளார்.சேலம் டிசிபி லாவண்யா, சென்னை காவலர் பயிற்சிப் பள்ளி முதல்வராக மாற்றப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை எஸ்.பி நிஷா ஐபிஎஸ், சென்னை மாநகர டிசிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.சிவகங்கை எஸ்.பி செல்வராஜ், வண்டலூர் போலீஸ் அகாடமி இணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் துணை ஆணையர் அதிவீரபாண்டியன், நாகை கடலோர பாதுகாப்புப் படை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை எஸ்பியாக மீனா நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை எஸ்பியாக அரவிந்த் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சரவணன் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவடி துணை ஆணையராக இருந்த உமையாள், கோயம்பேடு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக மகேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
போலீஸ் அகாடமி துணை ஆணையராக இருந்த தீபா சத்யன் பள்ளிக்கரணை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக இருந்த பொன்.கார்த்திக் குமார் அடையாறு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் பவன் குமார் ரெட்டி தாம்பரம் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து உதவி ஆணையர் சக்திவேல் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
சக்தி கணேசன் உயர்நீதிமன்றம் வழக்குகளை கண்காணிக்கும் பிரிவு உதவி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜராஜன் சேலம் நகர காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சந்திரமவுலி சேலம் நகர காவல் தலைமையக துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். புக்யா சினேக பிரியா மதுரை நகர வடக்கு காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரமேஷ் பாபு மாநில நவீன காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். விஜய கார்த்திக் ராஜ் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு மதுரை பிரிவு எஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். ஜோஸ் தங்கையா பொருளாதார குற்றப் பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆவடி 5 வது பட்டாலியன் கமாண்டண்ட் ஆகவும், பண்டி கங்காதர் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் விஜிலென்ஸ் எஸ்.பியாகவும், எச்.ஜெயலட்சுமி சென்னை மெட்ரோ ரயில் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications