பஞ்சாயத்துக்கு மேல் பஞ்சாயத்து.. சீட்டுக்களை கலைத்து போட்ட ஸ்டாலின்! தூக்கியடிக்கப்பட்ட எஸ்.பி.க்கள்
சென்னை: தமிழகத்தில் காவல் துறையினர் மீதான புகார்கள் அடுத்தடுத்து கிளம்பி வரும் நிலையில் நேற்று 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றத்துக்கு காரணமாக சில காரணங்கள் கசிந்துள்ளது. மேலும், இன்று அல்லது நாளை மேலும் சில ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றமும் இந்த வாரத்தில் அரங்கேறலாம் என சொல்லப்படுகிறது.
திமுக அரசு அமைந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாம் ஆண்டில் பயணிக்கிறது. அதே நேரத்தில் காவல் துறை தொடர்புடைய பல்வேறு சிக்கல்கள் அரசுக்கு எழுந்தது. பொது மக்களை தாக்குவது, காவல் நிலையம் மரணங்கள் என 2025 ஆம் ஆண்டில் பல்வேறு பிரச்சனைகள் முளைத்தது.
குறிப்பாக சிவகங்கை அஜித் குமார் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் போராட்டத்தால் தேசிய அளவில் இந்த விவகாரம் கவனத்தை பெற்றது.

இந்த நிலையில் திடீரென நேற்று 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்ட எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு சிவப்பிரசாத் நியமிக்கப்பட்டார். நாமக்கல் எஸ்பியாக விமலா, வேலூர் எஸ்பிியாக மயில்வாகனன், திருப்பத்தூர் எஸ்பியாக, சியாமளாதேவி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கரூர் மாவட்டத்தின் புதிய எஸ்பியாக ஜோஸ் தங்கையா நியமனம் செய்யப்பட்டார். இதேபோல தேனி, ராணிப்பேட்டை,அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட எஸ்பிகளும் மாற்றப்பட்டனர்.
மேலும், எஸ்பிசிஐடி ஸ்பெஷல் பிரான்ச் எஸ்பி அருள் அரசு சென்னை தீவிரவாத தடுப்பு எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்பி அருண் பாலகோபாலன் அறிவு சார் சொத்துரிமை அமலாக்க பிரிவு எஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். கரூர் மாவட்ட எஸ்பி பெரோஸ் கான் அப்துல்லா, ஆவடி இணை கமிஷனர் ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார். காத்திருப்பு பட்டியலில் இருந்த ஆசிஷ் ராபர்ட் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாகவும், நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் சென்னை எஸ்பிசிஐடி எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதேபோல தேனி எஸ்பி சிவப்பிரசாத், சிவகங்கை எஸ்பி ஆகவும், விமலா ஐபிஎஸ் நாமக்கல் எஸ்பி ஆகவும் மயில்வாகனன் வேலூர் மாவட்ட எஸ்பி ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம் தொடரும் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.
சிவகங்கை அஜித் மரணம், கரூரில் மணல் கொள்ளை விவகாரத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டது, திருமலா பால் மேலாளர் வழக்கில் சர்ச்சை உள்ளிட்ட விவகாரங்கள் காரணமாகவே இந்த மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர். அது மட்டுமல்லாமல் மத்திய மற்றும் தெற்கு மண்டலத்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட இருப்பதாகவும் இதற்கான பட்டியல் தலைமை செயலர் மூலம் முதல்வரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ஐபிஎஸ் மட்டுமல்லாது ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றமும் விரைவில் இருக்கும் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications