33 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி! துணை ஆணையர் பாண்டியராஜன் பழனிக்கு மாற்றம்
சென்னை: தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிவகங்கை எஸ்பியாக சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் எஸ்பியாக விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன், பழனி பட்டாலியன் கமாண்டனட் எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வபோது காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்விவரம் வருமாறு:-

* சிவகங்கை எஸ்பியாக சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* நாமக்கல் எஸ்பியாக விமாலா, வேலூர் ஏஸ்பியா மயில் வாகணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* அரியலூர் எஸ்பியாக விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தேனி எஸ்பியாக புக்ய ஸ்னேக பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* கள்ளக்குறிச்சி எஸ்பியாக ஜிஎஸ் மாதவன், தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாக அருளரசு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன், பழனி பட்டாலியன் கமாண்டனட் எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* காவல்துறை பொதுப்பிரிவு ஐஜியான சாமுண்டீஸ்வரி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருமலா பால் நிறுவன மேலாளர் மரணம்
திருமலா பால் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேலாளர் நவீன் மர்மமான முறையில் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில் கொளத்தூர் துணை ஆணையராக பாண்டியராஜன் விசாரணை நடத்தியதாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து தற்காலிக விடுப்பில் அனுப்பப்பட்ட காவல் அதிகாரி பாண்டியராஜன் பழனியில் உள்ள டிபிஎஸ் பட்டாலியன் எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications