சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரேஷன் கடைகளுக்கு மேஜர் உத்தரவு.. ஆக்‌ஷனில் குதித்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்.. பொது மக்களுக்கு இனி நிம்மதி

ரேஷன் கடைகளுக்கு வண்ணம் பூசி, தூய்மை செய்யும் பணிகள் ஆரம்பமாகி உள்ளன

Google Oneindia Tamil News

சென்னை: ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்.. இதனால் தமிழக மக்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன..

இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பல பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் காக்கப்பட்டு வருகின்றன..

ரேஷன் கடைகளில் இனி இப்படியா.. பறந்த அடுத்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அதிரடி.. நிம்மதியில் மக்கள்ரேஷன் கடைகளில் இனி இப்படியா.. பறந்த அடுத்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அதிரடி.. நிம்மதியில் மக்கள்

ஆய்வுகள்

ஆய்வுகள்

மேலும், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக, ரேஷன் கடைகள் குறித்த புது புது அறிவிப்புகள் அடிக்கடி வெளியாகி கொண்டே இருக்கிறது.. நியாய விலைக் கடைகளில் கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாக செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு முதல், சென்னை நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் ஊழியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பது வரை அதிரடிகள் வெளியாகின.

 ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

அந்தவகையில், கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசும்போது ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.. அப்போது அவர் சொல்லும்போது, "35 ஆயிரம் ரேஷன் கடைகளை மாற்றி அமைக்க வேண்டி உள்ளது.. ஆனால், ஒரேயடியாக இவைகளை மாற்றி அமைப்பது கடினம்.. எனவே, அடுத்த 3 மாதங்களில் படிப்படியாக மாற்றி அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்... ரேஷன் கடைகளில் வரும் பொது மக்களுக்கு, பணம் கொடுத்து பொருட்களை வாங்க வேண்டும் என்று பணியாளர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது...

 ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

பொது மக்களே, தாமாக முன்வந்து வாங்குவதற்கான விளம்பரத்தை மேற்கொள்ள வேண்டுமே, தவிர, மக்களை பொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. அதேபோல, ரேஷன் பொருட்கள் தவிர்த்து மற்ற பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்று சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு உள்ளது" என்று கூறியிருந்தார்.. இப்போது அடுத்த அதிரடியை ராதாகிருஷ்ணன் கையில் எடுத்துள்ளார்.. அதாவது, தமிழகத்தில், 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன... இதில், பெரும்பாலான கடைகள் செயல்படும் கட்டடங்கள், பாழடைந்து காட்சி அளிக்கின்றன.

 நம்ம ரேஷன் கடை

நம்ம ரேஷன் கடை

இந்த கடைகளில் சரிவர தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.. இதனால், மக்கள் ஒருங்கிணைப்புடன் ரேஷன் கடைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக, "நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை" என்ற புதிய முயற்சியை, கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் துவக்கியுள்ளார்.. இந்த திட்டத்தின்படி, தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உடன் இணைந்து, ரேஷன் கடைகளுக்கு வண்ணம் பூசுவது உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

கலர்புல்

கலர்புல்

அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளில் துாய்மை பணி செய்து, பெயிண்ட் அடிப்பது போன்ற பணிகள், முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன... கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன்கள், கூட்டுறவு சங்க சேவைகள் தொடர்பாக, கடை சுவர்களில் விழிப்புணர்வு வாசகங்களும் எழுதப்படுகின்றன... இந்த வாசகங்கள் பொதுமக்களை கவரும் வகையில் அமைந்து வருகிறது.. எத்தனையோ கடைகள், தூய்மையில்லாமல் பொலிவில்லாமல் காணப்பட்ட நிலையில், அவையெல்லாம் கலர்புல்லாக மாறிக் கொண்டிருக்கிறதாம்..!

English summary
35000+ Ration Shops: great announcement by tamilnadu co operative dept IAS Radhakrishnan ரேஷன் கடைகளுக்கு வண்ணம் பூசி, தூய்மை செய்யும் பணிகள் ஆரம்பமாகி உள்ளன
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X