கொரோனா பாதிப்பு.. தமிழகம் முழுவதும் 385 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று நோய் தடுப்பு பகுதிகளாக 385 இடங்கள் அடையாளம் காணப்பட்டு . அந்த 385 இடங்களும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 71 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.
நேற்று ஒரு நாளில் மட்டும் சென்னை 55 பேருக்கு புதிதாக கண்டறியப்பட்டது. ஒட்டுமொத்தமாக சென்னையில் 358 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

123 பேருக்கு கொரோனா
கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் 123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 9 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 4 பேர். 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் 24 பேர் உள்ளனர். 30 முதல் 39 வயதுக்குள் 79 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் 80 வயதை கடந்தவர்களாவார்கள் ஆவார். இதேபோல் கோவை, திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் 50 முதல் 100க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறை
இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் பஞ்சாய்த்து அமைப்புகளில் 789 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டு அறைகளில் சுமார் 3லட்சத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கொரோனாவை கண்டறிவது
இந்த பணியாளர்கள் தான் கொரோனா பாதித்த தெருக்களை கண்டறிவது, தனிமைப்படுத்துவது, கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிவது, அவருடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிவது, மக்கள் நடமாட்டத்தை தடுப்பதற்கு தடுப்புகள் அமைப்பது போன்ற பணிகளை செய்கிறார்கள்.

தடை செய்யப்பட்ட பகுதிகள்
அந்த வகையில் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று நோய் தடுப்பு பகுதிகளாக 385 இடங்கள் அடையாளம் கண்டு. அந்த 385 இடங்களை தனிமைப்படுத்தி, தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்து தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள். இந்த பகுதிக்குள் அந்நியர்கள் நுழைய முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த இந்த பகுதிகளில் போலீசார் 24 மணி தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பல அடுக்கு பாதுகாப்பு போட்டு மக்கள் நடமாட்டத்தை தடுத்து வருகிறார்கள்.

ராயபுரத்தில் அதிகம்
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் சேர்த்து கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது இந்த 358 பேரும் வசித்த 112 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலம்தான் மிக அதிகமாக 116 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தண்டையார்பேட்டை மண்டலத்தில் 46 பேரும், தேனாம்பேட்டை, திரு.வி.க.நகர் மண்டலங்களில் தலா 42 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 35 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications