அடியோடு மாறுது! சென்னையில் வருது 3டி பஸ் ஸ்டாண்டுகள்.. என்னென்ன வசதிகள் இருக்குன்னு தெரியுமா?
சென்னை: சென்னையில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா வசதியுடன் கூடிய 3டி பஸ் ஸ்டாண்டுகள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மொத்தம் ரூ. 12 கோடி மதிப்பீட்டில் சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், சாந்தோம் உள்ளிட்ட 81 நிறுத்தங்களில் 3டி வடிவ பேருந்து நிறுத்தங்களை அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த 3டி பஸ் நிறுத்தங்களில் போஸ்டர் ஒட்டமுடியாது. தேவைப்படும்போது வேறு இடத்திற்கு மாற்றம் செய்துகொள்ள முடியும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சாலைகளை சீரமைப்பது, பஸ்களை புதுப்பிப்பது என பல்வேறு நடவடிக்கைகள் செய்யப்படுகின்றன.

அரசு பஸ்கள்: மின்சார பஸ்கள், தாழ்தள பஸ்கள், டபுள் டக்கர் பஸ் சேவைகளை கொண்டு வருவது என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு புது நடவடிக்கைகளை செய்து வருகிறது. இதேபோன்று பஸ் நிறுத்தங்களிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையின் முக்கிய நிறுத்தங்களில் பஸ்கள் எப்போது வரும், எத்தனை மணிக்கு வரும் என்ற தகவல் இடம்பெறும் வகையில் டிஜிட்டல் போர்டுகள் வைக்கும் பணி ஒரு புறம் நடந்து வருகிறது.

81 இடங்களில்: இதேபோன்று பஸ் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்றப்படியும் பஸ் நிறுத்தங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள 81 இடங்களில் 3டி வடிவ பஸ் நிறுத்தங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு, நவீனப்படுத்துதல் அடிப்படையில் இந்த புது முயற்சியை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது.
3டி பேருந்து நிறுத்தம்: சென்னை சாந்தோம், பட்டினப்பாக்கம், டிஜி வைஷ்ணவா கல்லூரி உள்ளிட்ட 81 இடங்களில் இந்த 3 டி வடிவ பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த 3 டி வடிவ பேருந்து நிறுத்தத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் தேவைப்படும் போது இந்த பஸ் நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
என்னென்ன வசதிகள்?: இந்த 3டி வடிவ பேருந்து நிறுத்தத்தில் போஸ்டர்கள் ஒட்ட முடியாது. ரூ. 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த 3டி வடிவ பேருந்து நிறுத்தமானது அமைக்கப்பட உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் முதற்கட்டமாக் சென்னை மெரினா கடற்கரை பஸ் நிறுத்தத்தை 3டி வடிவில் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

3டி வடிவ பஸ் நிறுத்தத்தில் உள்ள சிசிடிவி கேமராவானது ஆபத்து நேரத்தில் நேரடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சி: சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் மொத்தம் 1420 பேருந்துகள் பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது. இதில் சில பஸ் நிறுத்தங்கள் சேதமடைந்து இருப்பதால் இவற்றை பராமரிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதில் பழுதடைந்த 700 பஸ் நிறுத்தங்கள் ஒப்பந்ததாரர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மற்ற பேருந்து நிறுத்தங்களை மாநகராட்சி மேம்படுத்தி வருகிறது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications