"3ஆவது நீதிபதி தீர்ப்பு.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு எதிரானது!" திமுக வழக்கறிஞர் சரவணன் பரபர
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அவரது கைது சட்ட விரோதமானது இல்லை என்று மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் சரவணன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த மாதம் நடந்த சோதனையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரது கைதை தொடர்ந்து அவரது மனைவி மேகலா தாக்கல் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் இதனை விசாரித்தார். இந்த வழக்கில் அவர் இன்று தீர்ப்பு அளித்தார்.
தீர்ப்பு: செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்த நீதிபதி, தான் குற்றம் செய்யவில்லை என்பதை அவர் நீதிமன்றத்தில் என்றும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், செந்தில் பாலாஜியைக் காவலில் எடுப்பது குறித்து ஏற்கனவே விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் விசாரித்து இறுதித் தீர்ப்பை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இது செந்தில் பாலாஜி தரப்பிற்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த திமுக வழக்கறிஞர் சரவணன், "செந்தில் பாலாஜி வழக்கில் இன்று 3ஆவது நீதிபதி தீர்ப்பை வழங்கியுள்ளார். ஆட்கொணர்வு மனுவைத் தள்ளுபடி செய்து, செந்தில் பாலாஜி கைது சரிதான் என்றும் இதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றார். மேலும் பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்புடன் உடன்படுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கை விசாரித்த அந்த இரண்டு நீதிபதிகளுக்கும் தனது தீர்ப்பையும் அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் இறுதித் தீர்ப்பை அளிக்க உள்ளனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது: இந்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்படும் நாளில் காலை முதலே சோதனை நடந்து கொண்டிருந்தது. எனவே, கைதின் போது அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டியது இல்லை என்பது போலக் கூறியுள்ளார். இருப்பினும், இந்த கருத்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.

கைதுக்கான காரணம் காவல் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அது அவருக்கே தெரியும் என்று சொல்வதை ஏற்க முடியாது. அவர்களுக்கே தெரிந்திருக்கும் இதனால் கைதுக்கான காரணம் குறித்து தகவல் தரத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் எந்தவொரு தீர்ப்பையும் வழங்கவில்லை. மேலும், முதல் 15 நாளில் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். அதற்குள் விசாரிக்கவில்லை என்றால் அதன் பிறகு எப்போதுமே விசாரிக்க முடியாது. இதை உச்ச நீதிமன்றமே தனது தீர்பில் தெளிவுபடுத்தியுள்ளது.
விசாரிக்க முடியாது: 15 நாட்கள் முடிந்துவிட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகக் கூறியிருந்தது. இருப்பினும், இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சரியில்லாததால் அவரை அமலாக்கத் துறையினரால் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என்றும் இதனால் இந்த காவலை நீட்டிக்கலாம் என்றும் நீதிபதி கார்த்திகேயன் புதிய கருத்தைத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒரு கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்தே இல்லை.
இந்த வழக்கின் முக்கியத்துவம் என்னவென்றால், அமலாக்கத் துறையினர் காவல் அதிகாரிகள் இல்லை என்பதை அனைத்து நீதிபதிகளும் ஏற்றுக் கொள்கிறார்கள். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கூட அமலாக்கத் துறையினர் காவல் அதிகாரிகள் இல்லை என்பதை ஒப்புக் கொள்வதாகவே கூறினார்.
எந்த சட்டத்திலும் இல்லை: இருப்பினும் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அமலாக்கத் துறையினர் காவல் அதிகாரிகள் இல்லை என்ற போதிலும் அவர்களுக்கு அந்த அதிகாரம் இருக்கிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார். நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று எந்த சட்டத்திலும் இல்லை. இந்த வழக்கு இப்படியொரு சூழலில் தான் இருக்கிறது.
இந்த வழக்கில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்திருந்த நிலையில், அதனை வரும் 24 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரிக்க உள்ளது. அன்றைய தினம் இந்த அனைத்து தீர்ப்புகளும் அங்கே சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் இதில் இறுதி முடிவை எடுக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
-
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி -
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி.. கேம் சேஞ்சர் ஸ்டாலின்.. திமுக பக்கா ஸ்கெட்ச் -
செந்தில் பாலாஜி கோவையில் போட்டியா.. ஆடிப்போன எஸ்.பி வேலுமணி.. செய்தியாளர் கேள்விக்கு மழுப்பல் பதில் -
கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. தங்கமணிக்கு எதிராக தாறுமாறாக வியூகம் அமைக்கும் செந்தில்பாலாஜி -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications