ஆட்கொணர்வு மனுவில் மாறுபட்ட தீர்ப்பு.. 3ஆவது நீதிபதி நியமனம்..செந்தில் பாலாஜி விடுவிக்கப்படுவாரா?
சென்னை: செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா பிறப்பித்துள்ளார்.
செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத் சக்ரவர்த்தி ஆகியோர் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தனர்.

அதில் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர். அந்த வகையில் நீதிபதி நிஷா பானு, மேகலாவின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்று தீர்ப்பளித்துள்ளார். மேலும் கைது சட்ட விதிகளின் படி இல்லை எனவே ஆட்கொணர்வு மனு ஏற்கப்படுகிறது. செந்தில் பாலாஜியை உடனடியாக விடுவிக்கலாம். நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதம் என்பதால் அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக தீர்ப்பளித்த நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி பின்னர் தனது தீர்ப்பை வாசித்தார். அதில் நீதிபதி நிஷா பானு தீர்ப்பை தாம் ஏற்கவில்லை. எனவே அதில் தான் மாறுபடுவதாகவும் கூறி தனது தீர்ப்பை வாசித்தார். மனுதரார் கணவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டப் பிறகு இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. செந்தில்பாலாஜியை சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என கூறமுடியாது. கைது நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற காவலில் அடைத்து பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் சட்ட விதிகளை பின்பற்றி நடைபெற்றுள்ளது. எனவே மேகலாவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தனது மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
இதனால் இந்த வழக்கு இன்னொரு அமர்வுக்கு மாற்றப்படும். அந்த அமர்வு விசாரணை நடத்தும். அப்போது அவர் என்ன தீர்ப்பு அளிக்கிறாரோ அதை பொருத்து வழக்கின் போக்கு அமையும். அந்த வகையில் 3ஆவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications