சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"காடு"களுக்கு கட்டிங்.. "புதர்" போல தொங்கிய தாடிகளுக்கு ஷேவிங்.. பளிச்சென மாறிய ஊரக ஆண்கள்.. சூப்பர்

புறநகர் பகுதிகளில் சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன

Google Oneindia Tamil News

சென்னை: காடு போல வளர்ந்திருந்த முடிகள் அத்தனையும் இன்று "கட்டிங்" செய்யப்பட்டன.. புதர் போல வளர்ந்து தொங்கி கொண்டிருந்த தாடிகள் மழித்து "ஷேவ்" செய்யப்பட்டன.. 60 நாளைக்கு பிறகு புறநகர் பகுதிகளில் உள்ள ஆண்கள் பளிச் என மாறி பெண்களுக்கு டஃப் கொடுத்து வருகின்றனர்!!

Recommended Video

    Lockdown 4.0| சலூன் கடைகளுக்கு அனுமதி... முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு

    முடி திருத்தும் தொழில் செய்ய தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்தது.. இதனால் கடந்த 3 மாதங்களாகவே ஆண்கள் யாருமே முடிவெட்ட முடியவில்லை.. தாடி, மீசை ட்ரிம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    அதேசமயம், முடி திருத்தும் தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் அவதிப்பட்டனர்.. இவர்களுக்கு அரசும் எந்த நிதியுதவியும் அளிக்கவில்லை. இதனால் குடும்பத்தை சமாளிப்பதை தவிர, கடை வாடகையை கூட இவர்களால் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    சென்னையில் அனைத்து அம்மா உணவகங்களிலும் மே 31 வரை இலவச உணவு.. தமிழக அரசு அறிவிப்புசென்னையில் அனைத்து அம்மா உணவகங்களிலும் மே 31 வரை இலவச உணவு.. தமிழக அரசு அறிவிப்பு

     சலூன்

    சலூன்

    இந்நிலையில், நேற்று ஊரக பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்து, சில விதிமுறைகளையும் பிறப்பித்தது.. அதன்படி, இன்று ஊரகப் பகுதிகளில் உள்ள சலூன் கடைகள் திறக்கப்பட்டன. பாதுகாப்பான முறையில் பணிகளை செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.. குறைந்தது 5 முறை கிருமிநாசினி தடுப்பு மருந்து தெளிக்க வேண்டும் என்று சொன்னதால், அதை கடைப்பிடித்து சலூன் கடைக்காரர்கள் தெளித்து வருகின்றனர்.

     கஸ்டமர்கள்

    கஸ்டமர்கள்

    அதேபோல கடைகளுக்கு வருபர்களுக்கும் கிருமி நாசினி தடுப்பு மருந்து தரப்பட்டு வருகிறது.. கஸ்டமர்கள் மாஸ்க்குடன் இருந்தால் மட்டுமே கட்டிங், ஷேவிங் செய்யப்படுகிறது.. மேலும், ஒவ்வொரு கஸ்டமருக்கும் தனித்தனி துணிகளை பயன்படுத்தி முடி வெட்டி வருகின்றனர். சில கிராமங்களில் வீடுகள் பக்கத்திலேயே முடிவெட்டும் பணியை சிலர் பாதுகாப்புடன் செய்து வருகின்றனர்.

     வெட்கம்

    வெட்கம்

    இதற்கு முன்பு ஆண்கள் இப்படி ஒரு பிரச்சனை வாழ்நாளில் சந்தித்திருக்க மாட்டார்கள்... இந்த 55 நாளுமே அவர்கள் தவித்து விட்டனர்.. வெளியே நடமாட முடியாத நிலை.. வீடுகளில் கட்டிங், ஷேவிங் செய்ய தெரிந்தவர்கள் ஒருசிலருக்கு உதவினாலும் பலரால் அப்படி செய்து கொள்ள முடியாத நிலைமையும் ஏற்பட்டு, ஒருவித வெட்கம் கலந்த உணர்விலும் அவதிப்பட்டு வந்தனர்.

     நிம்மதி

    நிம்மதி

    இன்றுதான் தங்கள் இஷ்டத்துக்கு முடிவெட்டி கொண்டும், தாடிகளை ட்ரிம் செய்தும், தலைகளுக்கு டை அடித்தும் வருகிறார்கள்.. 55 நாள்களுக்கு பிறகு அவர்கள் முகத்தில் மட்டுமல்ல.. சலூன் கடைக்காரர்கள் முகத்திலும் ஒருவித சந்தோஷமும், நிம்மதியும் தென்பட்டு வருகிறது.

    English summary
    4.0 lockdown: saloon shops opened at rural areas after 55 days
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X