4 +2 சக்ஸஸ்.. பாஜகவின் செம "காமெடி".. டாட்டா காட்டிய நட்டா.. ஆளூர் ஷா நவாஸ் ஒரே போடு.. என்னாச்சு?

ஜேபி நட்டா பேச்சுக்கு விசிகவின் ஆளூர் ஷா நவாஸ் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜேபி நட்டா பேசியதை, நாங்கள் எல்லாரும் தவறாக புரிந்து கொண்டனர் என்றால், அந்த கட்சியில் உள்ளவர்களும், அந்த மேடையில் இருந்தவர்களும், அந்த பேச்சை நேரடியாக கேட்டவர்களும்கூட, அப்படித்தானே புரிந்து கொண்டுள்ளார்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ளார் விசிகவின் ஆளூர் ஷா நவாஸ்..!

விசிக மாநில துணை பொதுச்செயலாளரும், அக்கட்சியின் எம்எல்ஏவுமான ஆளூர் ஷா நவாஸ், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ளார்.

அதில், பாஜக மூத்த தலைவர் ஜேபி நட்டாவின் தமிழக வருகை மற்றும் அவரது பேச்சுகுறித்து விமர்சித்துள்ளார்.. அத்துடன் திமுக எம்பி ஆ.ராசாவின் பேச்சுக்கும் ஆதரவு தந்து சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

 காமெடிகள்

காமெடிகள்

அவைகளின் சுருக்கம்தான் இது: "பாஜக எப்படியாவது தமிழகத்தில் களம் அமைக்க போராடி வருகிறது.. அதற்காக சில செயல்திட்டங்களை வகுத்துக் கொண்டு, களத்துக்கும் போகிறார்கள்.. ஆனால் கடைசியில் எல்லாமே காமெடியாக முடிந்துவிடுகிறது.. அப்படித்தான் இந்த முறை நட்டாவின் வருகையும், அவரது பேச்சும் அமைந்துவிட்டது.. "தமிழகத்தில் தலைவர்கள் படித்திருந்தால், நான் பேசியதை இப்படியெல்லாம் கருத்து சொல்ல மாட்டார்கள்" என்கிறார் நட்டா..

 ஐ பி எஸ் ஆபீசர்

ஐ பி எஸ் ஆபீசர்

அப்படியானால், தமிழகத்தின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படித்தவர்தானே? ஐபிஎஸ் படித்துள்ளாரே? எய்ம்ஸ் பற்றின கருத்தை சொன்னது சாதாரண நபர் இல்லையே.. பாஜகவின் அதிகாரப்பூர்வமான ட்விட்டரிலேயே, கார்டு வைத்து டிசைன் செய்து, எய்ம்ஸ் போட்டோவையும் வைத்து, நட்டாவின் போட்டோவையும் வைத்து, தமிழக பாஜக என்று பெயரையும் போட்டு, அண்ணாமலை, மோடி, நட்டா போட்டோவையும் வைத்து, தாமரையையும் வைத்து, "மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டன" என்று பதிவிட்டார்களே.

 மாணிக் தாகூர்

மாணிக் தாகூர்

ஆனால் ட்வீட்டை உடனே எடுத்துவிட்டார்கள் என்றால், இந்த திரிபுவாதத்தை செய்வது யார்? இந்த புரட்டை செய்தது யார்? எய்ம்ஸ் பற்றி நட்டா பேசியபோது, அந்த மேடையில் நாங்கள் இல்லை.. மாணிக் தாகூரோ, எம்பி வெங்கடேசனோ யாரும் அந்த மேடையில் இல்லை.. அந்த மேடையில் இருந்தவர்கள் எல்லாம் யார்? படித்த தலைவராக அண்ணாமலையை கொண்டிருக்கும் பாஜக ஏன் இப்படி பதிவிட்டது? இதற்கு அவங்கதான் விளக்கம் தர வேண்டும்.. நட்டா பேசியதை, நாங்கள் எல்லாரும் தவறாக புரிந்து கொண்டனர் என்றால், அந்த கட்சியில் உள்ளவர்களும், மேடையில் இருந்தவர்களும், அந்த பேச்சை நேரடியாக கேட்டவர்களும்கூட, அப்படித்தானே புரிந்து கொண்டுள்ளார்கள்?

கலைஞர்

கலைஞர்

ஆயத்த பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டதாக அவர் சொல்வதாகவே இருக்கட்டும்.. இந்த எய்ம்ஸ்க்கு மட்டும்தான் அனுமதி தந்தீர்களா? எப்போது தரப்பட்ட அனுமதி இது? எப்போது வந்த அறிவிப்பு இது? எட்டு வருஷமாக இந்த பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது.. பிற மாநில எய்ம்ஸ் எல்லாம் கட்டப்பட்டு முடிந்துவிட்டதுதானே? தமிழ்நாட்டுக்கு மட்டும் நீங்கள் தந்தது எய்ம்ஸ் மட்டும்தான்.. அதுவே இப்படி.. இதே மதுரையில் கலைஞர் நூலக கட்டுமானப்பணி நடந்து வருகிறதே.. 95 சதவீதம் கட்டுமான பணி முடிந்துவிட்டது என்று அதை வேண்டுமானால் சொல்லலாம்..

 கலைஞர் பில்டிங்

கலைஞர் பில்டிங்

ஒரு பிரம்மாண்டமான, நவீன கட்டுமானத்தை, வெறும் 8 மாதத்தில் கட்ட முடியும் என்பதை இந்த அரசு இதே மதுரையில் நிரூபித்துள்ளது.. ஒருவேளை நட்டா சிவகங்கை கூட்டத்துக்கு போகும்போது, இந்த மதுரை பில்டிங்கை பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன்.. மாற்றி சொல்லிவிட்டாரோ என்னவோ? தமிழ்நாட்டுக்கு ஒரு நல்லதும் நடந்துட கூடாது என்று பாஜக நினைத்தால் எப்படி? நட்டா பேசியதால் இந்த பிரச்சனையை நாங்கள் எழுப்பவில்லை.. சு.வெங்கடேசனும், மாணிக்க தாக்கூரும் இந்த எய்ம்ஸ் பற்றிதான் தொடர்ச்சியாக 8 வருடமாக பேசி கொண்டே இருக்கிறார்கள்..

சேலஞ்ச்

சேலஞ்ச்

ஆ.ராசாவை திமுகவிலேயே தனிமைப்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.. எவ்வளவு பெரிய அபாண்டம் இது? கி.வீரமணியின் தி.க. மேடையில் பேசிய கருத்துக்கு, திமுக மேடையில் பதில் தருகிறார் ஆ. ராசா.. சவால் விடுகிறார்.. வாதம் வைக்கிறார்.. கோர்ட்டுக்கு வா போகலாம் என்கிறார்.. ஆ.ராசா பேசிய விஷயத்தையே திமுகவில் எல்லாரும் பேச வேண்டும் என்பது கிடையாது.. கலைஞர் பேசினார் என்றால், கலைஞர் மட்டும்தான் அந்த கருத்தை பேசுவார்.. அதுபோல பிடிஆர் இன்று ஒரு கருத்தை சொன்னால், உடனே அதேகருத்தை எல்லாரும் சொல்ல வேண்டும் என்பது அவசியம் கிடையாது..

 இடியாப்ப சிக்கல்

இடியாப்ப சிக்கல்

ஒரு கருத்தை ஆ.ராசா முன்வைக்கிறார் என்றால், அது நிச்சயம் ஆழமானதாகத்தான் இருக்கும்.. அதே கருத்தை இன்னொருவர் பேசினால், அது வேற ஒரு பிரச்சனையில் போய் முடியவும் வாய்ப்புள்ளது.. பாஜக இதைதான் எதிர்பார்க்கிறது.. யாராவது வாய்விட்டால் அதைவைத்து திரிபு அரசியலை நடத்தலாமா என்று காத்து கிடக்கிறது.. சிக்குவார்களா என்று எதிர்பார்த்து வருகிறது.. ராசா மீது அவதூறாக பேசியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுதான் வருகிறது.. ஆனால், ராசா பேசியதற்கு இதுவரை பாஜகவில் பதில் எங்கே? ஒருகாலத்தில் அப்படி நடந்தது என்கிறார்கள்.. அப்படியானால் அதற்கு பாஜக என்ன செய்தீர்கள்? அந்த இழிவை போக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.. இதைதான் திராவிட இயக்கங்கள் இன்று செய்து கொண்டிருக்கின்றன.

 திருமாவளவன்

திருமாவளவன்

அதனால், முதலில் முருகன் இந்த பக்கம் வந்து சேருங்க.. தமிழிசை இங்கே வந்து சேருங்க.. அண்ணாமலையும் இங்கே வந்து சேருங்க.. திராவிட இயக்கத்துக்கு வாங்க... சமூக நீதி இயக்கத்தை நோக்கத்தை வந்துடுங்க.. கடந்த தேர்தலின்போது, எங்க தலைவர் ஒரு ஐரோப்பிய நிகழ்ச்சி ஒன்றில் ஆன்லைனில் நடந்த கூட்டத்தில் மனுஸ்மிருதி குறித்து பேசினார்.. "இந்து பெண்களை திருமாவளவன் அவமானப்படுத்திவிட்டார்" என்று வெட்டி ஒட்டி பிரச்சனை செய்தார்கள்.. அதுமட்டுமல்ல, திமுக கூட்டணியில் கூட விசிக இடம் பெறாது.. இந்து ஓட்டுக்கள் திமுகவுக்கு வராது.. விசிகவை கூட்டணியில் வைத்திருந்தால் இனி ஆபத்துதான்.. இப்படியெல்லாம் பரப்பினார்கள்..

 4 +2 சக்ஸஸ்

4 +2 சக்ஸஸ்

கடைசியில் திமுக பெற்றி பெற்றது.. விசிக 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளோம்.. 2 பொதுத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம்.. விசிகவின் வரலாற்று தேர்தல் இது.. காரணம் இதுதான் தமிழ்நாடு.. சர்ச்சையாக பேசினார் என்று கிளப்பிவிட்டு, ஓட்டுக்களை பிரிக்கலாம் என்று நினைக்க வாய்ப்பே இல்லை.. ஒடுக்கப்பட்ட இந்துக்களுக்கு, பாதிக்கப்பட்ட 95 சதவீத மக்களுக்கு, இந்த உண்மை தெரியும்.. யார் நமக்காக வருபவர்கள் யார் என்பதையும் அவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+