அமுதா ஐஏஎஸ் போட்ட ஆர்டர்.. தமிழ்நாட்டில் 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கு எஸ்பியாக புரோமோசன்
சென்னை: தமிழ்நாட்டில் 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கு, காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு அளித்து உத்தரவிட்டு இருக்கிறார் தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர் அமுதா.
இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், திருச்சியில் தமிழ்நாடு சிறப்பு காவல் பட்டாலியன் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த எஸ்.ரவிச்சந்திரன், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று ஏற்கனவே காலியாக இருந்த திருச்சி மாநகர காவல்துறை தலைமையக துணை ஆணையர் பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளார்.

விழுப்புரம் போலீஸ் பள்ளி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த எச் ரமேஷ் பாபு, காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, எம்.ராஜராஜனுக்கு மாற்றாக சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த வி மலையாச்சாமியும், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று ஆதர்ஷ் பசேராவுக்கு மாற்றாக சென்னை அறிவுசார் சொத்து உரிமை பாதுகாப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சேலம் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஏசி செல்லப்பாண்டியன் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, ஏற்கனவே காலியாக இருந்த ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் படை V பட்டாலியன் கமாண்டண்ட் பதவியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார். இந்த பதவி உயர்வு உடனடியாக அமலுக்கு வரும் என ஐஏஎஸ் அமுதா தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications