காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்.. பிடிபட்ட 4 சிறார்கள்! ஷாக்!
சென்னை: சென்னையில் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 4 சிறுவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சென்ட்ரல் - மைசூர் இடையே காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மைசூர் தொடங்கி, பெங்களூர், ஜோலார்பேட்டை, திருவள்ளூர் வழியாக சென்னை சென்ட்ரல் வந்தடையும். மைசூரில் இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு காலை 7 மணிக்கு சென்னை செண்ட்ரலை வந்தடையும்.

நேற்று முன்தினம் இரவு மைசூரில் புறப்பட்ட காவேரி எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயில் நேற்று காலை 7 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்து, அந்த ரயில் கும்மிடிப்பூண்டியில் உள்ள டிப்போவுக்கு சென்றது. அப்போது, திருவொற்றியூர் அருகே சென்ற போது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
திடீரென சத்தம்.. அலறிய பயணிகள்! காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!
கல்வீச்சில் ரயில் பெட்டி கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. பெட்டிகள் காலியாக இருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரயில் நிலையம் வந்ததும், அதிகாரிகள் ரயிலை ஆய்வு செய்தனர். ரயில் பெட்டிகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கற்கள் வீசப்பட்டது தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி 4 சிறார்களை பிடித்துள்ளனர்.வரும் 9ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு பெற்றோர்களின் எழுதி வாங்கிக்கொண்டு சிறார்களை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications