கல்லூரி மாணவர்கள் கையில் கத்தி.. 4 பேரை தூக்கிய போலீசார்! “பஸ் டே” அட்டகாசம்? சென்னையில் அதிர்ச்சி!
சென்னை: கல்லூரி தொடங்கிய முதல் நாளிலேயே சென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்னர் கலை அறிவியல் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. விடுமுறை முடிந்து மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கல்லூரிக்கு வந்துள்ளனர். பஸ் டே, ரூட் தல மோதல்களில் மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பேருந்து நிலையம் பகுதியில் இன்று காலை 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கூட்டமாக நின்று கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அங்கு வந்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது "பஸ் டே" கொண்டாடுவதற்காக கூட்டமாக இருப்பதாகவும் அதற்காக குரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம் என்றும் அந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தியபோது அவர்கள் கத்திகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மாணவர்கள் 4 பேரை புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் என்பதும் தாம்பரம், பொன்னேரி பகுதிகளைச் சேர்ந்த அந்த மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவதற்காக இன்று கூட்டமாக நின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 4 கத்திகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் கத்திகளை எங்கிருந்து வாங்கினீர்கள் என்று கேட்டதற்கு, தங்கள் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களிடம் வாங்கியதாக தெரிவித்தனர். இதையடுத்து, இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவர்கள் எதற்காக கத்தி வைத்திருந்தார்கள், மற்ற கல்லூரி மாணவர்களிடம் மோதல் ஏதேனும் உள்ளதா? அல்லது பஸ் டே கொண்டாடும்போது கத்தியை வீசி வீடியோ எடுப்பதற்காக வைத்திருந்தார்களா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications