சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் 9 தொகுதிகளில்.. நான்கு இதுதானாம்!

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 4 தொகுதிகள் உறுதியாகி உள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: வரும் எம்பி தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 4 தொகுதிகளை அக்கட்சிக்கு உறுதி செய்தது திமுக.

முதல்முதலாக காங்கிரசுடன் கூட்டணி என்று அறிவித்ததும், முதன்முதலாக 10 என்று சீட்டுகளை ஒதுக்கியதும் திமுகதான்!

அந்த வகையில் 10-ல் ஒன்று புதுச்சேரிக்கு போக, மீதம் 9 தொகுதியில் காங்கிரஸ் களம் காண போகிறது. கோஷ்டி பூசல்களை தாண்டி யாருக்கு என்ன சீட் காங்கிரஸ் தருமோ தெரியவில்லை.

ஒரே நாளில் 40 தொகுதிகளுக்கும்.. அதி வேக நேர்காணல்.. புதிய சாதனை படைத்த திமுக! ஒரே நாளில் 40 தொகுதிகளுக்கும்.. அதி வேக நேர்காணல்.. புதிய சாதனை படைத்த திமுக!

கேஎஸ் அழகிரி

கேஎஸ் அழகிரி

இந்த 9 தொகுதிகள் எவை என்பதை கண்டறிவதற்காக காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழுவினர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று துரைமுருகன் தலைமையிலான திமுக குழுவினரை சந்தித்து பேசினார்கள்.

4 தொகுதிகள்

4 தொகுதிகள்

அப்போது சிவகங்கை, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவது உறுதியானது. மிச்சம் உள்ள 5 தொகுதிகள் எவை என்பதற்கான பேச்சுவார்த்தை இனி நடைபெறும் என்றும் சொல்லப்பட்டது.

திமுக தனி லிஸ்ட்

திமுக தனி லிஸ்ட்

அதாவது, தென்காசி, திருநெல்வேலி, திருச்சி, மயிலாடுதுறை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, அரக்கோணம், திருவள்ளூர் என்ற இந்த 8 தொகுதிகளில் இருந்து, ஏதாவது 5 தொகுதிகளை தருமாறு காங்கிரஸ் கேட்கிறது. ஆனால் திமுகவோ மேற்கண்ட தொகுதிகள் குறித்து தனியாக ஒரு லிஸ்ட் தயாரித்து வைத்துள்ளது.

கரூர்?

கரூர்?

அதனால் உடனடியாக ஒரு முடிவு எடுக்க முடியவில்லை என்பதால் 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு நாங்கள் வருகிறோம் என்று சொல்லிவிட்டு அழகிரி கிளம்பி சென்றார். இந்தநிலையில், கரூர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கலாம் என்ற ஒரு பேச்சு திமுகவில் எழுந்துள்ளதாக சூடான தகவல் ஒன்று வர ஆரம்பித்துள்ளது.

English summary
DMK 9 seats allocated in the coalition and 4 Constitutions confirm for Congress
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X