புஸ்ஸூன்னு போச்சே.. "பயந்துட்டியா குமாரு".. அதிமுக கொடிதான், ஆனா "கொடி மாதிரி".. ஆமா, இதென்ன புதுஸ்ஸா
சென்னை: கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி பழனிசாமி செக் வைக்கும் முயற்சியில் இறங்கி வரும்நிலையில், திருச்சி மாநாட்டிற்கும் குடைச்சலை தந்து கொண்டிருக்கிறது.
24ம் தேதி அதிமுக முப்பெரும் விழா மாநாடு திருச்சியில் நடைபெற போவதால், அதற்கான வேலைகளில் முனைப்பு காட்டி வருகிறார்.. ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது, ஓபிஎஸ்ஸூக்கான பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்றும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எச்சரித்தும் வருகிறார்கள்.
பொள்ளாச்சி ஜெயராமன்: அதிமுகவின் எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று முன்தினம் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "பேரவையில், இனிமேல் அதிமுகவின் பெயரை சொல்லி ஓபிஎஸ் உட்கார முடியாது.. அதிமுகவின் கொறடா சொன்னால் மட்டும்தான் அமர முடியும்.. அதேபோல ஓபிஎஸ் இனிமேல் அதிமுக கொடியை காரில்கூட கட்டக்கூடாது.. அப்படி இனிமேல் அவர் கொடியை பயன்படுத்தினால் நாங்கள் கிரிமினல் வழக்கு பதிவு செய்வோம்..
நாளையில் இருந்து ஓபிஎஸ் அவரது காரில் அதிமுக கொடியை கட்டிக் கொண்டு வருவாரா என்று மட்டும் பாருங்கள்.. அப்படி கொடியை கட்டிக்கொண்டு வந்தால், சட்டம் தன் கடமையை செய்யும்" என்று கூறியிருந்தார்.. ஆனால், ஓபிஎஸ்ஸோ, இன்னமும் காரில் அதிமுக கொடியுடன்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்.. இதை சுட்டிக்காட்டிதான் நேற்றைய தினம் செய்தியாளர்கள், எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினர்.. அதற்கு எடப்பாடி, " "நீதிமன்ற உத்தரவை பின்பற்றி, தேர்தல் ஆணையத்தை மதித்து, நாகரீகத்தை கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.
எடப்பாடி நாகரீகம்: ஓபிஎஸ் காரில் அதிமுக கொடியை இப்போதுவரை அகற்றவில்லை.. மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட நிலையிலும்கூட, எப்போதும் போலவே, "ஒருங்கிணைப்பாளர் " என்றே தன்னுடைய லெட்டர்பேடில் ஓபிஎஸ் பயன்படுத்தி அறிக்கையை வெளியிட்டு வருகிறாராம்.. அதுமட்டுமல்ல, அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் ஓபிஎஸ் பயன்படுத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி தரப்பில் தொடர்ந்து வார்னிங் தரப்பட்டு வரும்நிலையில், திருச்சி மாநாட்டில் அதிமுக கொடி நிறைய பறக்க வேண்டும் என்று அதிரடியாக ஓபிஎஸ் உத்தரவிட்டிருக்கிறாராம்.
மாநாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா கட் அவுட்கள் வைக்கப்படும் என்றும் தெரிகிறது.. அதேபோல அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றே போஸ்டர் விளம்பரங்களில் பயம்படுத்தவும் முடிவு செய்துள்ளார்களாம்.. இப்போது விஷயம் என்னவென்றால், நாலாபக்கமும் ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி தரப்பில் வார்னிங் பறந்துவந்து கொண்டிருப்பதால், திருச்சி மாநாட்டில் அதிமுகவின் அங்கீகரிக்கப்பட்ட கொடியை பன்னீர்செல்வம் அணியினர் பயன்படுத்தாமல் தவிர்த்துள்ளார்களாம்.
பாஜக அடித்தளம்: இந்த திருச்சி மாநாட்டைத்தான் தன்னுடைய நகர்வில் புதிய அத்தியாயம் என்று ஓபிஎஸ் கருதுகிறார்.. இந்த திருச்சி மாநாட்டைத்தான், தன்னுடைய மொத்த பலத்தை நிரூபிக்க காட்டும் களமாக ஓபிஎஸ் கருதுகிறார்.. இந்த திருச்சி மாநாட்டைத்தான், பாஜகவின் நம்பிக்கையை பெற்றுத்தரும் அடித்தளமாக ஓபிஎஸ் கருதுகிறார்.. இப்படி பல கணக்குகளை போட்டு ஓபிஎஸ், மும்முரத்தில் இறங்கிவரும்நிலையில்தான், எடப்பாடி தரப்பு ஓபிஎஸ்ஸூக்கு அழுத்தத்தை தர துவங்கி உள்ளது.
இப்போதைக்கு மாநாடு நடக்கவுள்ள மைதானத்தை சுற்றி கொடிகள் நடப்பட்டுள்ளன... அந்த கொடிகள் கருப்பு, சிவப்பு நிறத்தில் உள்ளது.. இந்த கொடிகளுக்கு நடுவே மறைந்த முதல்வர் அண்ணாதுரை, இரட்டை இலை சின்னம் மேலே உள்ளது போல் இருக்கிறது.. இது அதிமுகவை ஞாபகப்படுத்தும் கொடி என்றாலும், தேர்தல் கமிஷனால் அதிமுகவுக்கு அங்கீகரிக்கப்பட்ட கொடி இல்லை.. அதாவது, இந்த கொடியை பார்க்க அதிமுகவே போலவே இருக்கும்.. ஆனால், அதிமுக கொடி கிடையாது.
பயந்துட்டாரா ஓபிஎஸ்: அங்கீகரிக்கப்பட்ட கொடி என்பது, கருப்பு, சிவப்பு நிறத்தில், கொடியின் நடுவே அண்ணாதுரை போட்டோ இடம்பெற்றிருக்கும்.. ஆனால், பன்னீர் பயன்படுத்தப்போகும் கொடியானது, அதிமுக கொடி போல தோற்றம் மட்டுமே தரும்.. அதிகாரப்பூர்வமான கொடி கிடையாதாம்... ஓபிஎஸ்ஸின் இந்த பின்வாங்கலையே, எடப்பாடி பழனிசாமியினர் தங்களின் இன்னொரு வெற்றியாக கருதி வருகிறார்கள்.. சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தால், அதற்கு பயந்துதான், அங்கீகரிக்கப்பட்ட கொடியை ஓபிஎஸ் பயன்படுத்தவில்லை என்கிறார்கள்..!!!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications