அவர் ஏன் உள்ளே வந்தார்? தோனி மீது எழுந்த சந்தேகம்.. திருப்பி அடித்த தல.. கற்றுக்கொடுத்த 4 பாடங்கள்!
சென்னை: நேற்று டெல்லிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி ஆடிய விதம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தோனியின் பேட்டிங் 4 முக்கியமான விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளது.
Recommended Video
நேற்று டெல்லிக்கு எதிராக ப்ளே ஆப் ஐபிஎல் 2021 போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற்றது. ருத்துராஜ், உத்தப்பா, தோனி ஆகியோரின் அதிரடி காரணமாக சிஎஸ்கே வெற்றிபெற்றது.
சிஎஸ்கே அணிக்கு கடைசி இரண்டு ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் களமிறங்கிய தோனி வெறும் 6 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்தார்.

நம்பிக்கை
தோனி தனது சிறப்பான ஆட்டம் மூலம் 4 முக்கியமான விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளார். இந்த போட்டியில் தோனி கற்றுக்கொடுத்த முதல் விஷயம் என்றால் அது தன்னம்பிக்கை. உலகமே நேற்று கிட்டத்தட்ட தோனிக்கு எதிராக நின்றது என்றுதான் சொல்ல வேண்டும். தோனியின் ரசிகர்கள் கூட அவருக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை வைத்துக்கொண்டு இருந்தனர். தோனி பார்மில் இல்லையே அவர் ஏன் இறங்கினார். ஐயோ அவர் ஏன் உள்ளே வந்தார். இது தவறான முடிவு என்று பலரும் விமர்சனம் வைத்தனர்.

தோனி நம்பிக்கை
ஆனால் தோனி தன் மீது நம்பிக்கை வைத்து இருந்தார். நான் பலமுறை இதை செய்து இருக்கிறேன். பலமுறை விமர்சனங்களை கடந்து நன்றாக ஆடி ஆட்டத்தை முடித்து இருக்கிறேன். நான் மீண்டும் அதை இன்று செய்வேன் என்று நம்பிக்கையோடு களமிறங்கி, உலகமே அவரை எதிர்த்தாலும் தன் மீது நம்பிக்கை இழக்காமல் அவர் ஆடி ஆட்டத்தை முடித்துக்கொடுத்தார். இந்த வயதில் தோனி தன் மீது கொண்ட நம்பிக்கை பலரையும் கவர்ந்து உள்ளது.

ரிஸ்க்
இரண்டாவது விஷயம் தோனி விமர்சனங்களுக்கு அஞ்சாமல் ரிஸ்க் எடுத்தார். தோனிக்கு முன்பு ஜடேஜா, பிராவோ இறங்கி இருக்கலாம். நேற்று சிஎஸ்கே தோல்வி அடைந்து இருந்தால் மொத்த பழியும் தோனி மீது விழுந்து இருக்கும். தோனிதான் தவறு செய்துவிட்டார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு இருக்கும். ஆனால் தோனி அதை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. ரிஸ்க் எடுக்க ரெடியாக இருந்தார். அதிலும் நேற்று ஆட்டம் ப்ளே ஆப் போட்டி.

கவலை இல்லை
ஆனால் தோனி ப்ளே ஆப் போட்டி என்பதை எல்லாம் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் அவர் மேட்சை முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனம் செலுத்தி, இரண்டாவது பந்தில் இருந்தே அதிரடி காட்டினார். விளைவு நேற்று சிஎஸ்கே தோனியின் அதிரடியால் வென்றது. தோனி கற்றுக்கொடுத்த மூன்றாவது விஷயம் கூலாக இருப்பது. நேற்று தோனி இறங்கியதும் முதல் பந்தை மிஸ் செய்தார்.

மாட்டவில்லை
தோனி பிடித்த முதல் பந்து பேட்டில் மாட்டவில்லை. மொத்த ரசிகர் பட்டாளமும், தோனி சொதப்ப போகிறார் என்றே நினைத்தது. ஆனால் தோனியோ முகத்தில் கவலையை காட்டவே இல்லை. கொஞ்சம் கூட டென்சன் ஆகவில்லை. அட போடா என்று எதை பற்றியும் கவலைப்படாமல் அடுத்த பந்தை தீப் மிட் விக்கெட் திசையில் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை மாற்றினார். எல்லா ரசிகர்களும்.. விமர்சகர்களும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த ஒரு சிக்ஸ் தோனியின் பேட்டில் இருந்து சீறிப்பாய்ந்தது.

சீறியது
அந்த ஒரு நொடிதான் தோனி மீதான நம்பிக்கை பலருக்கும் மீண்டு வந்தது. ஆனால் தோனியோ சிக்ஸ் அடித்துவிட்டேன் என்று சந்தோசப்படவில்லை. மேட்சை முடித்த போதும் கூட தோனி கொஞ்சம் கூட உணர்ச்சியை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தது பலரையும் கவர்ந்தது. கஷ்டத்திலும், சந்தோஷத்திலும் ஒரே மாதிரி இருந்த தோனியின் குணம் பலருக்கும் பாடமாக அமைந்தது.

கடைசி பாடம்
தோனி கற்றுக்கொடுத்த நான்காவது பாடம், தனது தவறை திருத்திக் கொள்வது. நேற்று போட்டிக்கு முன்பு வரை தோனி பேட்டிங் பார்மில் இல்லை. மிக மோசமான பார்மில் இருந்தார். ஸ்லோ பால், ஸ்பின் பாலில் சொதப்பினார். ஆனால் அந்த தவறை எல்லாம் வலைப்பயிற்சியில் சரி செய்தார். பிராவோ போன்ற பவுலர்களை எதிர்கொண்டு வலைப்பயிற்சியில் டெத் ஓவருக்காக தயார் ஆனார்.

தவறு
தனது தவறு இதுதான்.. நான் சரியாக ஆடவில்லை என்று உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றபடி பயிற்சி மேற்கொண்டார். இதை தோனியும் நேற்று பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். தோனி இப்படி தவறை உணர்ந்து கொண்டதே பாதி விஷயத்தை சரி செய்துவிட்டது. நோயை கண்டுபிடிப்பதுதான் 90 சதவிகித மருத்துவம் என்பார்கள். அதைதான் தோனி கண்டுபிடித்து நேற்று சரி செய்தார். தோனி நேற்று போட்டியில் பார்மிற்கு திரும்பியது.. முடங்கி கிடந்த பலருக்கு மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது!
-
அகீல் ஹொசைன், ஓவர்டன், குர்ஜப்னீத் சிங்.. சிஎஸ்கே அணியில் 3 மாற்றங்கள் கட்டாயம்.. செய்வாரா ருதுராஜ்? -
ஒரு காலத்துல சிஎஸ்கே எப்படி இருந்த டீம் தெரியுமா.. ரொம்ப வருத்தமா இருக்கு.. புலம்பி தள்ளிய அஸ்வின்! -
சிஎஸ்கே வெற்றிக்கு 4 வீரர்கள் முக்கியம்.. பஞ்சாப் அணியின் ஒரே பலவீனம்! செய்வாரா ருதுராஜ் கெய்க்வாட்? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications