அரசு ஊழியர்களுக்கு.. மணி மணியாக வந்த 4 நல்ல அறிவிப்புகள்! ஸ்டாலின் எடுத்த முடிவு! இப்படி ஒரு காரணமா?
சென்னை: தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் மாநில அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் விதமாக அடுத்தடுத்து 4 முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 46% இருந்து 50 % உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதன் மூலமாக மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 46 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயரும்.
இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு 2846.16 கோடி செலவு ஏற்படும். இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். 46% அகவிலைப்படி 01.01.2024 முதல் 50%ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த அகவிலைப்படி உயர்வு தொகை அந்த மாதமே வரவு வைக்கப்பட்டு உள்ளது.
அறிவிப்பு 1: ஒரு வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டில் மீண்டும் கடந்த மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 9% உயர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2016ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்குபவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. 1.1.2024 முதல் அகவிலைப்படியை 9% உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏஐசிபிஐ என்ற குறியீடு மூலம்தான் கணக்கீடு செய்யப்படுகிறது.
இந்த புள்ளிகள் தொடர்ந்து உயர்ந்தால் அதன் சராசரியை வைத்து அகவிலைப்படி உயர்வு கணக்கீடு செய்யப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை குறைந்து வந்த இந்த புள்ளிகள் தற்போது வேகமாக உயர தொடங்கி உள்ளது.இந்த குறியீடு ஜனவரியில் 132.8 என்ற அளவில் இருந்தது. அதன்பின் ஏற்ற இறக்கமாக புள்ளிகள் சென்று கொண்டு இருந்தன. அதாவது ஒரு புள்ளி ஏறுவது, ஒரு புள்ளி இறங்குவது என்று ஏற்ற இறக்கமாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து புள்ளிகள் மீண்டும் வேகமாக உயர தொடங்கி உள்ளன.
அறிவிப்பு 2: தமிழ்நாடு அரசு சார்பாக மின்வாரிய ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. மின்வாரிய ஓய்வூதியர், வாழ்நாள் சான்றிதழ் வாங்க எங்கும் செல்ல வேண்டாம்.
சிறப்பம்சங்கள்:
💠வாழ்நாள் சான்றிதழ்
💠மருத்துவ காப்பீட்டு அட்டை, பதிவிறக்கம்
💠ஆதார் எண் இணைப்பு
💠வருமான வரி தாக்கல் செய்ய, வருடாந்திர ஓய்வூதிய அறிக்கை
💠ஓய்வூதிய ஆணைகள், படிவங்கள், அறிக்கைகள்
அனைத்தும் பிரத்யேக கைபேசி செயலியில், என்று அறிவித்து உள்ளனர்.
அறிவிப்பு 3: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1.17 இலட்சம் காவல் பணியாளருக்கு ரூ.5,000 வீதம் ரூ.58.50 கோடி கொரோனா உதவித் தொகை வழங்கப்பட்டதாக என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றுத் தடுப்பில் களப்பணியாற்றிய 1.17 லட்சம் காவல் துறையினருக்கு ஊக்கத்தொகையாகத் தலா ரூ.5,000 வீதம் 58.50 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதலைமைச்சர் காவல் பணியாளர்களின் கொரோனா கால சிறப்புப் பணிகளை பாராட்டி ரூ.58.50 கோடி இதற்காக விடுவிக்கப்பட்டு உள்ளது.
அறிவிப்பு 4: இது போக போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ38 கோடி பணப்பலன் விடுவிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி ரீதியாக பணப்பலன் விடுவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பல லட்சம் ஊழியர்கள் பலன் அடைவார்கள்.
கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு எப்போதும் விழும் அரசு ஊழியர்களின் வாக்குகள் குறைவாகவே விழுந்தன. இந்த நிலையில்தான் அரசு ஊழியர்களை திருப்திப்படுத்தும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications