எடப்பாடி பழனிசாமிக்கு 4 பி.எஸ்.ஓ.க்கள்! பாதுகாப்பு அதிகரிப்பு! கிட்ட நெருங்க முடியாது!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படவுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளது அவரது தரப்பு.
Recommended Video
எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு சஃபாரி அணிந்தவாறு ஒரு பெர்சனல் செக்யூரிட்டி ஆபிஸர் மட்டுமே இதுவரை உடன் பயணித்த நிலையில் இப்போது 4 பி.எஸ்.ஓ.க்களை பாதுகாப்பு இறக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வருபவர்கள் அவ்வளவு எளிதாக அவரை கிட்ட நெருங்க முடியாதபடி 4 பாதுகாவலர்கள் இப்போது நிறுத்தப்பட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுக்குழுவில் முறைப்படி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படவுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது பாதுகாப்பை அதிரித்துள்ள அவரது ஆதரவு டீம். சபாரி அணிந்தவாறு எப்போதும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு பி.எஸ்.ஓ மட்டுமே இதுவரை பாதுகாப்பு அளித்து வந்த நிலையில் இப்போது கூடுதலாக மூன்று பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆஜானபாகுவான தோற்றத்தில் சபாரி ஆடையில் உள்ள அவர்கள் எடப்பாடியை சுற்றி பாதுகாவலுக்கு நிற்கத் தொடங்கியுள்ளனர்.

எதிரிகள் அதிகரிப்பு
உயர்ந்த பதவிகளுக்கு செல்லச் செல்ல எதிரிகளும் அதிகரிப்பது அரசியல் மட்டும் என்றில்லாமல் அனைத்து துறைகளிலும் நிகழக்கூடிய ஒன்றுதான். சசிகலா, டிடிவி தினகரனை எதிர்த்து அரசியல் செய்து தனி தலைவராக உருவெடுத்த எடப்பாடி பழனிசாமி இப்போது ஓ.பன்னீர்செல்வத்தையும் எதிர்த்து நின்று பொதுச்செயலாளராக வரவுள்ளார். இதனால் அவருக்கு அரசியலில் எதிரிகளும் அதிகரித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குவியும் ஆதரவாளர்கள்
பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டி கட்சியினர் படையெடுத்த வண்ணம் உள்ளதால் அவர் இல்லம் அமைந்துள்ள பகுதியே திருவிழா கோலம் பூண்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு வீட்டுக்கு காரில் வருபவர்களை தெருவின் முனையிலேயே இறங்கிச் செல்லுமாறு காவலர்கள் அறிவுறுத்துகின்றனர். எடப்பாடி பழனிசாமி இல்லம் அருகே அமைந்துள்ள அமைச்சர்களின் இல்லங்களுக்கு இடையூறின்றி போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர் காவலர்கள்.

தள்ளு தள்ளு
இன்று காலை வரை ஓரளவு நின்று நிதானமாக விசிட்டர்களை சந்தித்து வந்த எடப்பாடி பழனிசாமி நண்பகலுக்கு மேல் கடகடவென பார்க்க ஆரம்பித்துவிட்டார். காரணம் அந்தளவுக்கு கூட்டம் கட்டியேறி வருகிறது. இதனால் தான் பி.எஸ்.ஓ.க்களும் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications