சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"40 தாமரை".. இயேசுவா?.. அமித்ஷா, மோடி இங்கே வாங்க.. "அவர்" மிஷனரிகிட்ட போறார்.. சீறிய அர்ஜுன் சம்பத்

பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என அர்ஜுன் சம்பத் கோரியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: அமித்ஷாவுக்கும், பிரதமர் மோடிக்கும் இந்து மக்கள் கட்சி சார்பில் மிக முக்கிய வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.. பாஜக தலைவர்கள் எச்.ராஜா, அண்ணாமலை முன்னிலையில், இந்த மெகா கோரிக்கையை விடுத்துள்ளது அர்ஜுன் சம்பத் ஆவார்.

தொடர்ந்து திமுகவை சீண்டியும் விமர்சித்தும் வருகிறார் அர்ஜுன் சம்பத்.. கடந்த ஒரு மாத காலத்தில் அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டிகளை எடுத்து பார்த்தால், திமுக அரசு மீதான கடுங்கோபத்தை மறக்காமல் வெளிப்படுத்தி வருகிறார்

அர்ஜுன் சம்பத் சொல்லும்போது, "ஈ.வே.ராமசாமி திராவிட இயக்கத்தினால்தான், காமராஜர் முதல்வர் ஆனார் என்று அவரின் வரலாற்றை திரித்து சொல்வதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகளை 4 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த உறவினர்கள்தமிழ் அரசியல் கைதிகளை 4 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த உறவினர்கள்

கருணாநிதி

கருணாநிதி

வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என்று ஏகப்பட்ட பிரச்னைகள் இங்கே இருக்கும்போது, கருணாநிதிக்கு பேனா சிலை தேவையா? அப்படி மட்டும் திமுக அமைக்க முயன்றால், இந்து மக்கள் கட்சி சும்மா இருக்காது.. நிச்சயம் போராட்டத்தில் ஈடுபடும்.. கருணாநிதி தேசியக் கொடியேற்றிய முகப்பு படத்தை தமிழக முதல்வர் வைத்துள்ளார். இதில் எதற்கு அரசியல்? இது தவறான முன்னுதாரணம்... திமுகவோ, கருணாநிதி குடும்பமோ சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது போன்று சரித்திரத்தை திரிப்பது ஆகும்.

 கிறிஸ்தவர்கள்

கிறிஸ்தவர்கள்

இந்துக்கள் நடத்தும் பள்ளியில் பிரச்சினை ஏற்பட்டால், உடனே அந்த பள்ளிக் கூடங்கள் சூறையாடப்படுகின்றன.. ஆனால், இதே கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் பிரச்சனை ஏற்பட்டால் அது கண்டுகொள்ளப்படுவதில்லை.. சபாநாயகர் அப்பாவு, தமிழகத்தின் அஸ்திவாரமே கிறிஸ்தவர்கள்தான் என்கிறார்.. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தான் தமிழர்களின் வளர்ச்சிக்கு காரணம் என்று அவர் சொல்லலாமா?

 அஸ்திவாரம்

அஸ்திவாரம்

சபாநாயகர் அனைத்து மதத்தினருக்கும் சமமானவராகத்தானே இருக்க வேண்டும்? கிறித்தவ நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மாற்று மதத்தினரை இழிவாக பேசினால் என்ன அர்த்தம்? மற்ற மதத்தினரை படிப்பறிவு இல்லாதவர்கள் என்று பேசலாமா? இதற்கு சபாநாயகர் வருத்தம் தெரிவிக்காவிட்டால், அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கருப்பு கொடி காட்டுவோம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அர்ஜுன் சம்பத் தெரிவித்து வருகிறார்.

 ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

இந்நிலையில், ஒருபடிமேலேபோய், பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் மிக முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்.. எவரும் எட்ட முடியாத எட்டாண்டு சாதனை என்ற புத்தகத்தை அர்ஜுன் சம்பத் எழுதியுள்ளார்.. பிரதமர் மோடியின் இந்த சாதனை விளக்க நூல் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் நடந்தது.. இந்த நூலை வெளியிட்டது பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா .. நூலை பெற்றுக் கொண்டது மாநில பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த நிகழ்ச்சியில் அர்ஜூன் சம்பத் பேசிய பேச்சுக்கள், தமிழக அரசியலின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

 திராவிட மாடல்

திராவிட மாடல்

அவர் பேசியதாவது: "இப்போதுள்ள திராவிட மாடல் ஆட்சியில், வரலாறு இருட்டடிப்பு செய்யப்படுகிறது... தமிழகத்தில், முதல் தேசியக் கொடி ஏற்றிய ஓமந்தூரார் தோட்டத்தில், அவரின் சிலையோ, போட்டோவோ இல்லை... ஆனால், கருணாநிதி சிலை திறக்கப்படுகிறது. திருப்பூர் குமரன் நினைவிடம் அருகில், சிலை வைத்தனர். இப்படி வரலாற்றுத் தலைவர்கள் உள்ள இடங்களில் எல்லாம், ஈவெரா., அண்ணாதுரை, கருணாநிதி சிலைகளை பெரிது பெரிதாக வைத்து, பொம்மை நாடாக்க பார்க்கின்றனர்...

 மிஷனரிகள்

மிஷனரிகள்

காங்கிரசை சேர்ந்த ராகுல், தியாகிகளின் நினைவிடத்துக்கு போகவில்லை.. வாரிசுகளையும் சந்திக்கவில்லை.. ஆனால், மிஷனரிகள் நடத்தும் இடங்களுக்கு மறக்காமல் சென்று வருகிறார்... இதிலிருந்து அவரின் நோக்கம் என்னவென்று புரிகிறது.. தமிழகத்தில் இருந்து வீணாக 39 பேர் எம்பியாகி இருக்கிறார்கள்.. மத்திய அரசின் திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து கொண்டிருப்பதே இந்த 39 பேர்தான்.

 40 தாமரைகள்

40 தாமரைகள்

இந்த நிலை மாற வேண்டுமானால், 2024 லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். அப்போதுதான் 40 தொகுதிகளும் பாஜக வசம் வரும்.. தமிழகம் வளரும் என்றார்.. பாஜக தலைவர்கள் மேடையில், அர்ஜுன் சம்பத் விடுத்துள்ள இந்த கோரிக்கை, டெல்லி வரை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.

English summary
40 BJP MPs: Hindu Makkal Katchi Arjun sampath slams DMK Government in his book release function in mylapore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X